Load Image
dinamalar telegram
Advertisement
Ramjan

இ - மெயிலில் பறக்குது வீரர்களின் புகைப்படங்கள்

Tamil News
ADVERTISEMENT
மாமல்லபுரம் :மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில், வீரர்கள் பங்கேற்றதன் நினைவாக, அவரவர் நவீன மொபைல் போனில் 'செல்பி' மற்றும் குழு புகைப்படம் எடுக்கின்றனர்.விருப்பம் உள்ளோர், கேமராவில் பிரத்யேக படம் எடுக்கவும், விடுதியின் முதல் அரங்கில் வராண்டா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஒப்பந்த புகைப்படக்காரர் ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், கேமராவில் படமெடுக்க வரும் சர்வதேச வீரர்களை, வெவ்வேறு கோணங்களில் நிற்க வைத்தும், கையில் செஸ் காய்கள் கொடுத்தும் புகைப்படம் எடுத்து, அவர்களை கவர்கிறார்.புகைப்படக்காரர் ராமசந்திரன் கூறியதாவது:வெளிநாட்டு வீரர்கள், மொபைலில் படம் எடுத்தாலும், தரமான புகைப்படம் எடுக்கு, இங்கு வருகின்றனர். கேமராவில் எடுத்த படத்தையும் பார்த்து மகிழ்கின்றனர். எடுக்கும் படங்களை, அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement