ADVERTISEMENT
அன்னூர்:சர்வர் பிரச்னையால் அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், மக்கள் நேற்று பல மணி நேரம் காத்திருந்தனர்.பத்திரப்பதிவுத்துறையில் வருவாயை பெருக்குவதற்காக, சனிக்கிழமையன்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்தது. அன்றைய தினம் பதிவு செய்யும் பத்திரங்களுக்கு, கூடுதலாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
நேற்று பத்திரப்பதிவு செய்ய, 100க்கும் மேற்பட்டோர் காலை 9:00 மணிக்கு, உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் டோக்கன் பெற்று காத்திருந்தனர். ஆனால் 10:00 மணிக்கு அலுவலகம் துவங்கியது முதல் மதியம் 1:30 மணி வரை, மூன்றரை மணி நேரம் சார் பதிவாளர் அலுவலகத்தால், சர்வர் இணைப்பு பெற முடியவில்லை. இதனால் முதியோர், பெண்கள் என பலரும் மணிக்கணக்கில் காத்திருந்தனர். ரியல் எஸ்டேட் முகவர்கள் கூறுகையில், 'வாரத்தில் மூன்று நாட்கள் சர்வர் முடங்கி விடுகிறது. கடந்த 4ம் தேதி காலை 10:00 மணிக்கு பத்திரம் பதிவு செய்ய, டோக்கன் பெற்று இருந்தவர்கள் மாலை 5:00 மணிக்குதான் அழைக்கப்பட்டனர்.அடிக்கடி சர்வர் முடங்கி விடுவதால், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சர்வர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!