Load Image
dinamalar telegram
Advertisement

15 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்



பெங்களூரு-பயணியர் வசதிக்காக, மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரம் மாற்றப்பட்டுள்ளது. இனி அதிகாலை மற்றும் இரவில் 15 நிமிடத்துக்கு ஒன்று வீதம் மெட்ரோ ரயில் இயங்கும்.இது தொடர்பாக பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், நேற்று வெளியிட்ட அறிக்கை:மெட்ரோ ரயிலில் பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே பயணியரின் வசதிக்காக, ரயில் போக்குவரத்து நேரத்தில், மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை 20 நிமிடத்துக்கு ஒன்று வீதம், மெட்ரோ ரயில் இயங்கி வந்தது.அதிகாலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை, 15 நிமிடத்துக்கு ஒரு ரயில், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, 15 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயங்கும். இது பயணியருக்கு அனுகூலமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement