வரும் 13 - 15ம் தேதி வரைசுதந்திர தின சிறப்பு நாடகம்
சென்னை :சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத் கலாச்சார், அப்பாஸ் கல்சுரல் மற்றும் ரோஷினி பைன் ஆர்ட்ஸ்' சார்பில், மூன்று நாட்கள் சிறப்பு நாடக விழா நடக்கிறது.நாட்டின் 75வது சுதந்திர தின விழா, அனைத்து துறையினராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், நாடக உலகின் சார்பிலும் சிறப்பு நாடக விழா நடத்தப்பட உள்ளது.'பாரத் கலாச்சார், அப்பாஸ் கல்சுரல் மற்றும் ரோஷினி பைன் ஆர்ட்ஸ்' சார்பில், வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள், தி.நகர், ஒய்.ஜி.பி., கலையரங்கில் நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளன.ஆக., 13ல் வெங்கட் இயக்கத்தில், ஒய்.ஜி.மகேந்திராவின், 'சாருகேசி' நாடகம் நடக்கிறது. 14ல், கிரேஸி குழுவினர் மற்றும் மாது பாலாஜியின், 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகமும், 15ல், 'அலாதீன் மற்றும் 100 வாட்ஸ் பல்ப்' நாடகமும் அரங்கேற்றப்பட உள்ளன.டிக்கெட் மற்றும் நாடகங்கள் தொடர்பான மேலும் விபரங்களுக்கு 97106 33633 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!