படவேட்டம்மன் கோவிலில்322ம் ஆண்டு தீமிதி திருவிழா
குரோம்பேட்டை, :குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், 322ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிச்சையாக நடக்கிறது.குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டையில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 322ம் ஆண்டு திமி திருவிழா, ஜூலை 29ம் தேதி துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது. முதல் நாளான, 29ம் தேதி, அபிஷேகம், கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா துவங்கியது. மூன்றாம் நாளான ஜூலை 31ம் தேதி, காலை 9:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், மாலை 5:00 மணிக்கு ஆடிப்பூரமும் நடந்தது.ஆக., 3 மாலை 6:00 மணி முதல் ஆக.,7 காலை 11:00 மணி வரை, ஜமீன் ராயப்பேட்டை இளைஞர் அணி சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்பதாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு இன்னிசை கச்சேரி, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.பத்தாம் நாளான இன்று, சிறப்பு அபிஷேகம் கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு தீ மிதி, இரவு 9:00 மணிக்கு சுவாமி ஊர்வலம், இரவு 10:00 மணிக்கு தெரு கூத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் ரேணுகிருஷ்ணன், கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!