Load Image
dinamalar telegram
Advertisement

செப்., 22 - 26ம் தேதி வரை மதுரையில் அஹிம்சை சந்தை

Tamil News
ADVERTISEMENT
தி.நகர்:மதுரையில், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 'அஹிம்சை சந்தை' குறித்து, சென்னை, தி.நகரில் நடந்த விழாவில், காந்தியவாதி பி.வி.ராஜகோபால் அறிமுகம் செய்தார்.
சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், தேசிய கைத்தறி நாளையொட்டி, பாரம்பரிய விதை, உணவு முறை, பருத்தி ஆடைகள் குறித்த 'வளங்குன்றா இயற்கை திருவிழா' மூன்று நாள் கண்காட்சி, துவங்கியது.
பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கவும், விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், 'இந்தியன் ஹேண்ட்மேட் கலெக்டிவ் டாட் காம்' என்ற இணையதளம் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு, அதை வழிநடத்தும் அனந்து மற்றும் சுபா பரத்வாஜ் ஆகியோர் கூட்டு முயற்சியில், இந்த கண்காட்சி நடக்கிறது.

சுற்றுச்சூழல்




இந்நிகழ்வில், 'காந்தியை பேசுவோம்' என்ற மாதாந்திர காந்திய பேச்சு தொடரை, காந்தியவாதியும், ஏக்தா பரிஷத் அமைப்பின் நிறுவனருமான பி.வி.ராஜகோபால் துவக்கி வைத்தார்.நிகழ்வில், காந்திய ஆய்வு மையம் எஸ்.பாண்டியன், மிஷன் சம்ரிதி மற்றும் சி.எம்.டி., அறிவுத்திறன் வடிவமைப்பு அரங்கம் நிறுவனர் அருண் ஜெயின், தக்கர் பாபா வித்யாலயா செயலர் மாருதி ராவ் ஆகியோர், பல தலைப்புகளில் காந்தி குறித்து பேசினர்.
மேலும், அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு சார்பில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், செப்., 22 முதல் 26ம் தேதி வரை, 'அஹிம்சை சந்தை' நடத்தப்பட உள்ளது. இந்த அஹிம்சை சந்தையை, காந்தியவாதி பி.வி.ராஜகோபால் அறிமுகம் செய்து வைத்தார்.பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'அஹிம்சை சந்தை'யில் தென் மாநிலங்களை சார்ந்த சமூக - சமத்துவ மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள நிறுவனங்கள் மற்றும் வாழ்வாதார மாதிரிகளை காட்சிப்படுத்த உள்ளோம்.

மூலிகை மருந்துகள்




இதன் வாயிலாக, அஹிம்சை பொருளாதாரத்தின் நிகழ் மாதிரியாக அமைவதுடன், அமைதியான வாழ்வியலை ஊக்குவிக்கும் தளமாகவும் அமையும்.தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களில் இருந்து இயற்கை உணவு, கைத்தறி நெசவு, சிறு வன உற்பத்தி பொருட்கள், மூலிகை மருந்துகள், மரபு கட்டுமானம் உள்ளிட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், முக்கிய மாற்றுச் சிந்தனையாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற தலைவர்களின் கல்வி அமர்வுகள் நடைபெறும். பூடான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே செப்., 22ம் தேதி, அகிம்சை சந்தை நிகழ்வில் பங்கேற்கிறார்.அஹிம்சை சந்தை, அஹிம்சை பொருளாதாரத்தின் பார்வையை, உலகுக்கு காட்சிப்படுத்தும் தளமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement