Load Image
dinamalar telegram
Advertisement

நடுவரால் குழப்பம் சிறுவனுக்கு கோபம்

Tamil News
ADVERTISEMENT

மாமல்லபுரம் :மாமல்லபுரம் 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில் நேற்று நடந்த போட்டியில், ஹாங்காங் நாட்டு சிறுவன் லவ்லுத்யான் லுக், ஹைதி நாட்டு சிறுவன் குய்லுாம் ஜூட் ஆகியோர் விளையாடினர்.இருவரும், ஒரே இடத்தில் காய்கள் நகர்த்தி தாமதித்த நிலையில், இருவரும் சமநிலை பெற்றதாக, நடுவர் அறிவித்தார்.இதனால் விரக்தியடைந்த ஹாங்காங் வீரர், மாலை 6:15 மணிக்கு, அரங்கத்திலிருந்து வெளியேறி, வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ேலும், ''நான் வெற்றி பெற இருந்த நிலையில், நடுவர் சமநிலை என அறிவித்து ஏமாற்றிவிட்டார்,'' என்றார்.சர்வதேச, இந்திய கூட்டமைப்பினர், இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறி அவரை சமாதானப்படுத்திய பின், வீரர் போராட்டத்தை கைவிட்டார். இதனால், அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement