Load Image
dinamalar telegram
Advertisement

சூப்பர் டிவிஷன் ஹாக்கி இறுதி போட்டிகோப்பை வென்றது ஐ.சி.எப்., அணி

Tamil News
ADVERTISEMENT
சென்னை:சூப்பர் டிவிஷன் ஹாக்கி லீக் இறுதிப் போட்டி, 'டிரா'ஆனதால்,'ஷூட் அவுட்' முறையில், ஐ.சி.எப்., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி 58வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்தன.ஓரு மாதம் முழுதும் நடந்த இப்போட்டியில், ஐ.சி.எப்., - தெற்கு ரயில்வே, தமிழக போலீஸ், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மொத்தம், 15 சீனியர் அணிகள், 'லீக்' முறையில் மோதின.அனைத்து போட்டிகள் முடிவில், ஐ.ஓ.பி., வங்கி மற்றும் எஸ்.டி.ஏ.டி., என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.அதில், ஐ.ஓ.பி., வங்கி மற்றும் ஐ.சி.எப்., அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. முன்னதாக நேற்று மாலை, மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில், 1 - 0 என்ற கோல் கணக்கில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.தொடர்ந்து, ஐ.ஓ.பி., வங்கி மற்றும் ஐ.சி.எப்., அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடந்தது. இதில், 30 நிமிடம் முடிவில் இரு அணிகளும், 0 - 0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. போட்டியின் முடிவில் இரு அணிகளும், 0 - 0 என்ற சமநிலையில் இருந்ததால், 'ஷூட் -அவுட்' முறை அளிக்கப்பட்டது. அதில், 4 - 3 என்ற கோல் கணக்கில், ஐ.சி.எப்., அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற ஐ.சி.எப்., அணிக்கு, ஸ்ரீராம் சிட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் கோப்பையை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement