காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு கே.ஜி.எப்., பாபு கடன் விளக்கம் அளிக்கும்படி அமலாக்க துறை நோட்டீஸ்
பெங்களூரு-காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கானுக்கு 3 கோடி ரூபாய் கடன் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, அக்கட்சி பிரமுகர் கே.ஜி.எப்., பாபுவுக்கு அமலாக்கத்துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
ஐ.எம்.ஏ., நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சாம்ராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான் வீடு, அலுவலகத்தில் கடந்த மாதம், அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது.அவரிடம் நடத்திய விசாரணையின் போது, காங்கிரஸ் பிரமுகர் யுசுப் ஷெரீப் எனும் கே.ஜி.எப்., பாபுவிடம் 3 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறியுள்ளார்.அதன் அடிப்படையில், கே.ஜி.எப்., பாபு வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சமீபத்தில் டில்லி சென்று அமலாக்க துறை விசாரணைக்கும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.இதற்கிடையில், ஜமீருக்கு 3 கோடி ரூபாய் கொடுத்தது தொடர்பாக, வரும் 10ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி அமலாக்க துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.இது குறித்து கே.ஜி.எப்., பாபு கூறுகையில், ''ஆண்டுதோறும் தவறாமல் வருமான வரி செலுத்துகிறேன். ஆனாலும் அமலாக்க துறை அதிகாரிகள் எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தும், அவரையும் விசாரிக்கின்றனர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!