Load Image
dinamalar telegram
Advertisement
Ramjan

மழைச்சாரலில் மயங்க தோணுதே!

Tamil News
ADVERTISEMENT
மாமல்லபுரம், :மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட போட்டி துவங்கிய நாளில் இருந்து, கடும் வெயிலில், சர்வதேச வீரர்கள் சிரமப்பட்டனர்.அவர்கள், விடுதியில் இருந்து போட்டி நடக்கும் அரங்கங்கள் வரை, 500 மீ., துாரம் நடந்து செல்வதற்குள், 'உஷ்... உஷ்' என, புழுக்கத்தில் நொந்தனர்.இரு நாட்களுக்கு முன், வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் மேக மூட்டமாய் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதலே மாமல்லபுரத்தில் சாரலும், துாரலுமாய் ரம்மியமாக மழை இருந்தது.இதை அனுபவித்த வீரர்கள், குடை பிடித்தபடியும், தங்களின் மேல் அங்கிகளை கழற்றி தலையில் போட்டபடியும் விளையாடச் சென்றனர். இதை ரசித்த புகைப்படகாரர்கள், அவர்களை விதவிதமாக புகைப்படம் எடுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement