Load Image
dinamalar telegram
Advertisement

விமான நிலையம், துறைமுகங்கள், எல்லைகளில் கண்காணிப்பு

பெங்களூரு-''கர்நாடகாவில் இதுவரை குரங்கு அம்மை இல்லை. ஆனாலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், எல்லைப் பகுதிகளில் கடுமையான கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது,'' என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து கன்டீரவா விளையாட்டு மைதானம் வரை நேற்று நடந்த 'சர்வதேச ரத்த நாள அறுவை சிகிச்சை தின' வாக்கத்தானை சுகாதார துறை அமைச்சர் சுதாகர் துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:கர்நாடகாவில் இதுவரை குரங்கு அம்மை இல்லை. முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்கள், துறைமுகங்கள், எல்லைப் பகுதிகளில் கடுமையான கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.எத்தியோப்பியாவை சேர்ந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகம் இருந்தது. ஆனால், ஆய்வில் அவருக்கு பெரியம்மை இருந்தது தெரியவந்தது.மாநிலத்திற்கு வரும் சர்வதேச பயணியரை கையாளுவதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.குரங்கு அம்மையை முக்கியமாக தோல் வெடிப்புகள் மூலம் கண்டறிய முடியும்.

இருப்பினும், கொரோனா போன்று தொற்று ஏற்பட்டு 3 முதல் 4 நாட்களுக்கு பிறகு தான் இது வெளிப்படும்.நாட்டில் போதிய ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் ரத்த நாள பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். போக்குவரத்து போலீசார், ஆசிரியர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ வல்லுனர்கள் நீண்ட நேரம் நிற்பதால், ரத்தநாள பிரச்னைக்கு ஆளாகின்றனர்.நரம்புகளில் சரியான ரத்த ஓட்டம் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நபரும் வழக்கமான லேசான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement