குடகில் கொட்டி தீர்க்கும் மழை: மின் இணைப்பின்றி மக்கள் அவதி
குடகு-குடகில் நேற்றும் கூட, கன மழை கொட்டி தீர்த்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது. காற்று வேகமாக வீசுவதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.
மின் இணைப்பு இல்லாமல், மக்கள் அவதிப்பட்டனர்.குடகு மாவட்டத்தை, தொடர் மழை வாட்டி வதைக்கிறது. நேற்றும் கூட பரவலாக கொட்டியது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டது. மண் சரிவு, வெள்ளப்பெருக்கு, வீடுகள் இடிந்தது, பயிர்கள் பாழானது என, பல பாதிப்புகள் ஏற்பட்டது.நேற்றும் கூட, கன மழை கொட்டி தீர்த்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது. காற்று வேகமாக வீசுவதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. மின் இணைப்பு இல்லாமல், மக்கள் அவதிப்பட்டனர்.பாகமண்டலா -- கரிகே சாலையில், மண் சரிந்திருந்தது. மீட்புப்படையினர் படாதபாடு பட்டு, மண்ணை அப்புறப்படுத்தினர்.ஆனால் குன்றுகள், மலையிலிருந்து சேற்று நீர் தொடர்ந்து இறங்குகிறது. சேறு கலந்த நீரில் நடமாடுவது ஆபத்தானது.பாகமண்டலாவின், திரிவேணி சங்கமம் ஏற்கனவே நிரம்பியுள்ளது. மூர்னாடு -- நாபோல்கு சாலையில், தண்ணீர் பாய்கிறது. இதே நிலைமை நீடித்தால், சாலை இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
சோம்வார்பேட்டில், சில வீடுகள் சேதமடைந்துள்ளது.பாலங்கள் இடிந்து, வெளிப்புற பகுதிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட தப்பட்கா, ஊருபைலு கிராமங்களில், 'மொபைல் நெட்ஒர்க்' கை விட்டுள்ளது.மதே கிராம பஞ்சாயத்தில், தொடர்ந்து மழை பெய்வதால், குன்று சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நேற்று முன் தினம் இரவு முதல், நேற்று காலை 8:30 மணி வரை, மடிகேரி, மதே, காளிபீடு பகுதிகளில், 12 செ.மீ.,க்கும் அதிகமான மழை கொட்டியது.மழை மேலும் நீடிக்கும் அறிகுறிகள் உள்ளதால், 'ரெட் அலெர்ட'' அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!