வீட்டு சுற்றுப்புறத்தில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
அன்னூர்:அன்னூர் அருகே கஞ்சா செடி வளர்த்த, வட மாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்திர பரீடா, 36. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக கணேசபுரத்தில் தனியார் ஸ்டீல் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். தொழிற்சாலையின் பின்புறம் தரிசாக உள்ள இடத்தில், குடும்பத்துடன் தங்கி உள்ளார். வீட்டை ஒட்டி உள்ள பகுதியில், இவர் சில மாதங்களாக கஞ்சா விதைகளை தூவி, செடியை வளர்த்து, அதில் முற்றிய செடிகளை பறித்து உலர வைத்து, கஞ்சா பாக்கெட் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா, எஸ்.ஐ., சிலம்பரசன் உள்ளிட்டோர் திடீர் சோதனை நடத்தி, ரவீந்திர பரீடாவை கைது செய்தனர். அவர் தனது வீட்டை ஒட்டி வளர்த்து வந்த, ஏழடி உயரம் உள்ள கஞ்சா செடிகளையும், அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களையும், பறிமுதல் செய்தனர். அவரிடம் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி செல்வராஜ் விசாரணை நடத்தினார். அதன் பின், மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!