Load Image
dinamalar telegram
Advertisement

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மரவள்ளிகிழங்கு விநாயகர் சிலை

மரவள்ளி கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், மருத்துவ குணங்கள் பற்றி தெரியும். ஆனால், தொட்டபல்லாபூரில் மரவள்ளிகிழங்கு துாள் மூலம் விநாயகர் உருவ சிலை உருவாக்குகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது.

விநாயகர் சதுர்த்தியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் களிமண்ணில் செய்யப்பட்டு வந்த சிலைகள், காலப்போக்கில் ரசாயனத்தால் செய்யப்படும் பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வாயிலாக சிலை உருவாக்கப்பட்டது.இதனை நீரில் கரைக்கும் போது, நீரிலுள்ள உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, களி மண் விநாயகர் சிலையின் மவுசு அதிகரித்து வருகிறது.தொட்டபல்லாபூர் குன்டமகரே ஹொசஹள்ளியை சேர்ந்த ஆதிநாராயண், 38, மரவள்ளிகிழங்கு துாள் மூலம், விநாயகர் சிலையை உருவாக்கி வருகிார்.இது குறித்து அவர் கூறியதாவது:இருபது ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் உருவாக்கும் தொழில் செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை தயாரித்து வருகிறோம். நீர்வாழ் உயிரினங்களும் வாழும் வகையில், மரவள்ளிகிழங்கு துாளில் சிலைகள் வடிவமைத்து வருகிறோம்.கேரளாவில் இருந்து இந்த பவுடரை கொண்டு வந்து, பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணீர் சேர்த்து 'பேஸ்ட்' போன்று மாற்றுவோம்.பின், விநாயகர் படிவம் கொண்ட பொருளில், இந்த 'பேஸ்டை' கொட்டி ஒரு நாள் முழுதும் வெயிலில் வைப்போம். அதை தொடர்ந்து, இயற்கை முறையில் தயாரான வர்ணம் பூசப்படும். ஒரு சிலையை உருவாக்க, நான்கு நாட்களாகும்.இந்த சிலைகள் தண்ணீரில் விரைந்து கரைவதுடன், நீர்வாழ் உயிரினங்களுக்கும் உணவாக மாறுகிறது.


இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும்.இந்த சிலை வடிவமைக்கும் தொழிலில், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்.ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை எட்டு மாதங்கள் பணி நடக்கும். வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக சிலைகள் செய்ய முடியும். சிறிய சிலைகள் ௧,௦௦௦ முதல் 1,500 ரூபாய் வரை விற்கிறோம். மலவள்ளி, மாண்டியா, சிக்கபல்லாபூர், மத்துார் பகுதிகளில் விற்று வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆதிநாராயண் மனைவி காயத்ரி கூறுகையில், ''வீட்டில் நாங்கள் அனைவரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். வீட்டு வேலையை பார்த்து கொண்டே இதை செய்கிறேன். நாள் ஒன்றுக்கு 50 சிறிய சிலைகளுக்கு வர்ணம் பூசுகிறோம்.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement