Load Image
dinamalar telegram
Advertisement

60 ஆண்டுக்கு பின் முழு தொகுப்பாக கம்பராமாயணம் நூல் வெளியீடு

Tamil News
ADVERTISEMENT
சென்னை:கம்பராமாயணம் நுால்களை, உ.வே.மதுரகவி வானமாமலை ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் சென்னையில் வெளியிட்டார்.
சென்னை, தி.நகரில், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலையம் மற்றும் மாறன் பதிப்பகம் சார்பில், ஆறு காண்டங்கள், ஒன்பது தொகுதிகள் அடங்கிய கம்பராமாயணம் நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.உ.வே.சா., நுால்நிலையம் சார்பில், 1957 முதல் 1962ம் வரை வரை, கம்பராமாயணம் ஆறு காண்டங்கள், ஒன்பது தொகுதிகளை, 10 ஆயிரத்து, 400 பக்கங்கள் உடைய நுாலை வெளியிட்டது.
தற்போது, 60 ஆண்டுகளுக்கு பின், முழு தொகுப்பாக பெங்களூரைச் சேர்ந்த மாறன் பதிப்பகத்தின் முயற்சியின் வாயிலாக அச்சிடப்பட்ட 250 பிரதிகள் பெறப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த விழாவில், உ.வே.மதுரகவி வானமாமலை ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் இந்நுாலை வெளியிட, முனைவர் எஸ்.பத்மநாபாசார்யார் சுவாமி, உ.வே.சா., விருது பெற்ற எம்.ஏ.வேங்கட கிருஷ்ணன் சுவாமி, 'கலைமகள்' மாத இதழ் முன்னாள் பதிப்பாசிரியர் ஆர்.நாராயணசாமி, 'வைணவன் குரல்' மாத இதழ் ஆசிரியர் டி.வி.ரங்கராஜன் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக அனைவரையும், மாறன் பதிப்பக பங்குதாரர் எஸ்.பார்த்தசாரதி வரவேற்றார். உ.வே.சா., நுால்நிலைய செயலர் டாக்டர் தி.சத்தியமூர்த்தி மற்றும் சேக்கிழார் ஆய்வு மைய செயலர் ஜெ.மோகன் சிறப்புரையாற்றினர்.
சத்தியமூர்த்தி பேசுகையில், ''இப்புத்தக வெளியீடு வெகு நாட்களாக எதிர்பார்த்தது. தற்போது நிறைவேறியுள்ளது. இதற்கு உதவிய அத்தனை பேருக்கும் மிக்க நன்றி,'' என்றார்.உ.வே.சா., நுால் நிலைய துணைத்தலைவர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி, நுால் அறிமுகம் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில், மாறன் பதிப்பக பங்குதாரர் எஸ்.வாசுதேவன் நன்றியுரையாற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement