பெங்களூரு நகர் சாலைகளின் புதுப்பொலிவுக்கு காரணமான மதுரை காரர்
பெங்களூரு நகரின் பல சாலைகள் புதுப்பொலிவுடன் காணப்படுவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம். சைக்கிள்கள் செல்ல தனி பாதை, சாலை ஓரங்களில் பச்சை பசேல் என்று தெரியும் செடிகள், அழகான நடைபாதை, சிமென்ட் சாலை என வெளிநாடு போன்ற தோற்றத்தை தரும்.இதற்கு முக்கிய காரணம், தமிழரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர சோழன் என்று சொன்னால் மிகையாகாது.
ஆம், இவர், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, அகத்திபட்டி குக்கிராமத்தில், பாலுச்சாமி - பொன்னுத்தாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.,; காமராஜர் பல்கலையில் எம்.பி.ஏ., படிப்பை முடித்துவிட்டு, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பம். எனவே அந்த பணியை விட்டு தேர்வு தயாராகும்படி தினந்தோறும் ஊக்கப்படுத்தி வந்தனர்.தமிழ் மொழில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி 2008ல் அகில இந்திய அளவில் 30வது ரேங்க் பெற்று சாதனை படைத்து பெற்றோருக்கு பெருமை தேடி தந்தார்.ஹாசனில் பயிற்சி முடித்து விட்டு, ஹாவேரியில் துணை கலெக்டராக பணியில் சேர்ந்தார். கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி, எஸ்காம், பெஸ்காம், என்.டபிள்யூ.ஆர்.டி.சி., என பல பொறுப்புகளை வகித்து விட்டு, ஹுப்பள்ளி தார்வாட் கலெக்டராக பணி புரிந்தார்.
கொரோனா இரண்டாம் அலையின் போது, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனராக இருந்த போது, நோயாளிகளின் வசதிக்காக நவீன தொழில்நுட்பம் கொண்டு வந்தார். இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் முன்பதிவு செய்தல், ஆக்சிஜன் இருப்பு, ஆம்புலன்ஸ் தேவை போன்றவைகளுக்கு உதவியாக இருந்தது. இதற்கு மத்திய அரசின் விருதும் கிடைத்தது.ஹுப்பள்ளியில் இருந்த போது, நவீன வசதிகளுடன் கொண்ட பஸ் போக்குவரத்து துவக்கி, தென் மாநிலங்களில் சிறந்த திட்டம் என்ற பெயர் பெற்றது.
தற்போது பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனராக இருக்கும் ராஜேந்திர சோழன், நகரின் 32 முக்கிய சாலைகள் நவீன முறையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. 30 சாலை பணிகள் முடிந்து விட்டது. தற்போது அவென்யூ சாலை, கே.எச்.பி., சாலை பணிகள் நடந்து வருகிறது.நுாறு கோடி ரூபாய் செலவில், அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் ஒரே இடத்தில் ஒப்புதல் வழங்கும் ஒருங்கிணைந்த திட்டம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.கே.ஆர்.மார்க்கெட், ரஸ்ஸல் மார்க்கெட் பாரம்பரியம் மாறாம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.
-நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!