பெலகாவியின் ஹின்டல்கா சிறையின் கதை
கர்நாடக மாநிலம், பெலகாவியின் ஹின்டல்கா சிறை, சாவர்க்கர் உட்பட எண்ணிலடங்கா சுதந்திர போராளிகளை, அடைத்து வைக்கப்பட்ட சிறையாகும்.
ஆங்கிலேயர்கள் கட்டிய அந்த சிறை, நுாற்றாண்டை நெருங்குகிறது.நாட்டில் 1923ல் சுதந்திர போராட்டம் சூடு பிடித்திருந்தது. ஆங்கிலேய அரசால் கைதாகி, சிறைக்கு வரும் போராளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது. சிறைகள் நிரம்பியதால், போராட்டக்காரர்களை அடைத்து வைப்பது, பெரும் தலைவலியாக இருந்தது. இதற்கு தீர்வு காண, பல இடங்களில் புதிய சிறைகள் கட்டப்பட்டது. இதில் பெலகாவியின் ஹின்டல்கா சிறையும் ஒன்றாகும்.இந்த சிறை 1923ல் கட்டப்பட்டது. கர்நாடகாவின் மிகப்பெரிய சிறை என்ற பெருமை பெற்றது. 99 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இங்கு 1,162 கைதிகளை அடைக்கலாம்.இதே கால கட்டத்தில், இந்தியாவில் ஒத்துழையாமை போராட்டம், உப்பு சத்தியாகிரக போராட்டம் தீவிரமாக இருந்தது. ஆங்கிலேய அரசு அலுவலகங்களை சூறையாடுவது, ரயில் தண்டவாளங்களை தகர்ப்பது என, பல போராட்டங்கள் நடந்தன. கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்றவை, போராட்டக்காரர்களை ஒடுக்க, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அஸ்திரங்களாகும்.இந்தியாவில் தங்களின் ஆட்சி எல்லையை, விஸ்தரிக்கும் வகையில், மனம் போனபடி சட்டங்களை அமல்படுத்தி, மக்கள் மீது திணிக்க துவங்கினர். மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து, சிறைக்கு அனுப்பியதுடன் அபராதமும் விதித்தனர்.
சாவர்க்கர், மைலார மஹாதேவப்பா, அந்தானப்பா தொட்டமேடி, மகாத்மா காந்தி செயலராக இருந்த மகாதேவ தேசாயி, கொட்டூரின் பத்ர ஷெட்டிசன்னா ருத்ரப்பா, அடவி பசப்பா, அன்னு குருஜி, வெங்கோசா பான்டகே, ஹல்தால் கோட்ரப்பா, தம்மாஜி மிரஜகரா, வாலி சென்னபசப்பா உட்பட, எண்ணிலடங்கா சுதந்திர போராட்டக்காரர்கள், ஹின்டல்கா சிறையில் தண்டனை அனுபவித்தனர்.துாக்கு தண்டனை நிறைவேற்றும், கர்நாடகாவின் ஒரே சிறை என்ற பெருமையும், இந்த சிறைக்கு உள்ளது. இப்போதும் கொலை குற்றவாளிகள், தீவிரவாதிகள் உட்பட நுாற்றுக்கணக்கான கைதிகள் அடைபட்டுள்ளனர். 2023ல் நுாற்றாண்டை கொண்டாடவுள்ளது.
-நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!