Load Image
dinamalar telegram
Advertisement

குமாரசாமி தயவால் நாங்கள் வாழ்கிறோம்



கோலார்-''கர்நாடகாவில் அனைத்து திட்டங்களின் சூத்திரதாரி, முன்னாள் முதல்வர் குமாரசாமிதான். அவரது கருணையால் நாங்கள் வாழ்கிறோம்,'' என காங்கிரஸ் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் கிண்டலடித்தார்.கோலார் பங்கார்பேட்டில் நேற்று அவர் கூறியதாவது:எரகோள் அணை தனது திட்டம் என, குமாரசாமி கூறுகிறார். கே.ஆர்.எஸ்., எத்தினஹொளே, எரகோள், எச்.என்., வேலி, கே.சி., வேலி உட்பட, மற்ற திட்டங்களுக்கும், குமாரசாமியே சூத்திரதாரி. நாங்கள் அவரது தயவால் வாழ்கிறோம்.என்னை சிலர் பகீரதன், மாபெரும் தலைவர் என புகழ்கின்றனர். மேலும் சிலர் நரி, சகுனி, துரியோதனன் என விமர்சிக்கின்றனர். ஊடகத்தினர் எனக்கு புதிதாக பெயர் இருந்தால், தாருங்கள்.எரகோள் அணை திட்டம் தாமதமாவது உண்மைதான். அதற்கு பல காரணங்கள் உள்ளன. 2016ல் நான் அமைச்சராக இருந்த போது, இடத்தை பார்வையிட வந்திருந்தேன். அப்போது அணை பணிகள் முடிந்திருக்கவில்லை. வேலை செய்ய வைத்த மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது.எப்போது மனம் வருகிறதோ, அப்போது திறந்து வைக்கட்டும். ஆனால் அணையை திறந்து வைக்கும்படி, நெருக்கடி கொடுப்போம். திட்டத்தின் பெருமையை பெற்றுக்கொள்ளட்டும். அதை நாங்கள் வரவேற்கிறேன். தமிழர்கள் வந்து, 'நாங்கள் திட்டத்தை கொண்டு வந்தோம்' என்றால், 'ஆமாம் நீங்கள்தான் செய்தீர்கள்' என்போம்.அணைக்கு சிவாஜி பெயர் வைக்க வேண்டுமென, சிலர் வலியுறுத்துகின்றனர். மேலும் சிலர் அம்பேத்கர் பெயரை வைக்கும்படி கூறுகின்றனர். எந்த பெயரை வேண்டுமானாலும் வைக்கட்டும், எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement