அரசு மருத்துவமனையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை:ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கஞ்சா விற்க வந்த நபரை, நர்ஸ்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த நர்ஸ் ஒருவர், 'யாரை பார்க்க வேண்டும்?' என விசாரித்தப்போது தெலுங்கில் பதிலளித்து உள்ளார்; பின் திடீரென ஓட்டம் பிடித்தார்.
சுதாரித்த நர்ஸ், மருத்துவமனை காவலர்கள் உதவியுடன், அவரை மடக்கி பிடித்து, கைப்பையை ஆராய்ந்தார்.அதில் கஞ்சா இருந்ததால், மருத்துவமனை வளாக போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவரை ஒப்படைத்தார்.போலீசார் விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணம்ம நாயுடு, 37, என்பது தெரிய வந்தது.
ஆந்திராவில் இருந்து ரயில் வாயிலாக கடத்தி வரப்பட்ட ஒன்பது கிலோ கஞ்சாவை, சென்னையை சேர்ந்த நபருக்கு விற்பனை செய்ய காத்திருந்தபோது, சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.இருப்பினும், மருத்துவமனைகளில் வேறு யாருக்காவது கஞ்சா விற்பனை செய்ய வந்தாரா, வாங்க வருவதாக கூறிய நபர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!