Load Image
dinamalar telegram
Advertisement

மாமல்லபுரம் சிற்பங்கள் காண 15 வரை இலவச அனுமதி

மாமல்லபுரம்:நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆக., 15ம் தேதி வரை, மாமல்லபுரம் சிற்பங்களை, பயணியர் இலவசமாக பார்க்கலாம்.
ஆங்கிலேயரிடமிருந்து, 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் கடந்துள்ளது. இதை முன்னிட்டு, மத்திய அரசு, நாடு முழுதும் கோலாகல நிகழ்ச்சிகள், விழாக்கள் என நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களில், ஆக., 15ம் தேதி வரை, நுழைவு கட்டணம் இன்றி, பார்வையாளர்களை இலவசமாக அனுமதிப்பதாக, தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவறைகள் உள்ளன. இங்கு, சுற்றுலாப் பயணியர் நுழைவுக்கட்டணமின்றி, சிற்பங்களை கண்டு ரசிக்கலாம்.
உலக பாரம்பரிய நாளான ஏப்., 18; உலக பாரம்பரிய வார துவக்க நாளான நவ., 19 ஆகிய நாட்களில் அனைவருக்கும், உலக பெண்கள் தினமான மார்ச் 8ல், பெண்களுக்கு மட்டும் என, ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே இலவச அனுமதி உண்டு.முதல் முறையாக, 11 நாட்கள் தொடர்ச்சியாக, இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement