ADVERTISEMENT
திருத்தணி:ஊராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிக்கப்படும் குடிநீர் வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட நிலையத்திற்கு வைப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெறுவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால், வீணாக இருக்கிறது.
திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட பட்டாபிராமபுரம் மற்றும் வினாயகபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வtாயிலாgக வினியோகம் செய்யும் குடிநீர் உவர்ப்பாக உள்ளதாக குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், 2018 - 19ம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், தண்ணீர் சுத்திகரிக்கப்பு செய்யும் இயந்திரம் மற்றும் குடிநீர் தொட்டி மற்றும் அறை உருவாக்கப்பட்டது. ஆனால், இதுவரை சுத்திகரிப்படும் நிலையத்திற்கு வைப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெறாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.
இதனால், ஒராண்டுக்கு மேலாக தண்ணீர் சுத்திகரிக்கப்படும் இயந்திரம் வீணாக இருக்கிறது. மேற்கண்ட இரு கிராம மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!