Load Image
Advertisement

ஆயுத பூஜை ஸ்வீட்ஸ் தயாரிக்கிறது ஆவின்

சென்னை:தீபாவளி பண்டிகையை போன்று, அதற்கு முன்னதாக கொண்டாடப்படும் ஆயுத பூஜைக்கும் சிறப்பு இனிப்புகளை விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் நிறுவனம் வாயிலாக, சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படும். கடந்த தீபாவளி நேரத்தில், 83 கோடி ரூபாய் அளவிற்கு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. வரும் அக்டோபர் 24ல், தீபாவளி பண்டிகை வருகிறது. இதையொட்டி காஜு கத்லி, நட்டி அல்வா, மோத்தி பாக், நெய் பாதுஷா, காஜு பிஸ்தா ரோல் ஆகிய சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

பட்டர் முருக்கு, மெட்ராஸ் மிக்சர் போன்ற கார வகைகளும் தயாரிக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, 200 கோடி ரூபாய் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, அக்., 4ம் தேதி ஆயுத பூஜையும், 5ம் தேதி விஜய தசமி பண்டிகையும் வருகின்றன.இந்நாளில், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் பூஜைகள் நடத்தப்படும். அப்போது, இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.

தீபாவளி பண்டிகையை போலவே, ஆயுத பூஜைக்கும் நெய் லட்டு, மைசூர் பாகு, பாதுஷா, மிக்சர் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்த, ஆவின் விற்பனை பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மொத்தமாக இனிப்பு வகைகள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, குறைந்த விலையில் வழங்கவும், ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement