2ம் நிலை சார் - பதிவாளர் நியமனத்தில் சட்ட சிக்கல்: திணறும் பதிவுத்துறை
சென்னை:பதிவுத்துறையில் உதவியாளர்களை, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக நியமிப்பதில், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், சார் - பதிவாளர்களுக்கு முந்தைய நிலையில் உதவியாளர்கள் உள்ளனர். இவர்களில் தகுதி பெறுவோர், பணி மூப்பு அடிப்படையில், சார் - பதிவாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். இதுவும் பதவி உயர்வுதான்; இதிலும், சமுதாய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
குறிப்பிட்ட சில வழக்குகளில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆதாரமாக வைத்து, 2021ல் அதிரடியாக, 112 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. முறையான பணி மூப்பு பட்டியல் இன்றி, பதவி உயர்வு வழங்கப்பட்டதாக புகார் எழுந்து, உயர் நீதிமன்ற உத்தரவால், இந்த பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த பின்னணியில், இரண்டாம் நிலை சார்- பதிவாளர் பதவி கேட்டு, பதிவுத்துறை அமைச்சர், தலைமை செயலர், முதல்வர் என பல்வேறு இடங்களில் மனு அளித்து வருகின்றனர். இந்த மனுக்கள் பரிசீலனைக்காக என, பதிவுத்துறைக்கு வந்த நிலையில், பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த விவகாரத்தில், ஏற்கனவே நீதிமன்றத்தில் அதிருப்திக்கு ஆளானது நினைவில் உள்ளது.மேலும், சார்- பதிவாளர் பதவி உயர்வு தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலவரம், கடைசியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்த விஷயங்களை ஆராய்ந்து வருகிறோம்.
உரிய சட்ட ஆலோசனை அடிப்படையிலேயே, இதில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கான பணிகளில் உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!