Load Image
dinamalar telegram
Advertisement

வகுப்பறையை சூழ்ந்த முட்புதர்கள் அகற்றம்

Tamil News
ADVERTISEMENT
ஊத்துக்கோட்டை:நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து, ஊராட்சி நிர்வாகம் வகுப்பறையை சூழ்ந்த முட்புதர்களை அகற்றினர்.பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இங்கு, பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர்.இப்பள்ளியில், ஒரு பக்கத்தில் உள்ள வகுப்பறைகளை சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளன.இதனால், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே வரும் அபாயம் உள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால், செடிகளில் இருந்து விஷ ஜந்துக்கள் வகுப்பறைகளுக்கு சென்று விடுகின்றன. இதனால், காலை நேரங்களில் வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள் வகுப்பறையில் ஏதேனும் விஷ ஜந்துக்கள் உள்ளதா என, பார்த்து விட்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, பென்னலுார்பேட்டை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வகுப்பறையை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement