கரு முட்டை விற்பனை விவகாரம்சீல் அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து
சென்னை:சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக, ஈரோடு மருத்துவமனையில், 'ஸ்கேன்' உள்ளிட்ட மருத்துவ கருவிகளுக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்ற பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஈரோடில், 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுதா மருத்துவமனையின் 'ஸ்கேன்' உள்ளிட்ட கருவிகளுக்கு 'சீல்' வைக்கப் பட்டது.புதிதாக நோயாளிகளை சேர்க்கக் கூடாது; சிகிச்சை பெறுபவர்களை 15 நாட்களில் 'டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும் எனவும், மருத்துவமனைக்கு, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. மருத்துவமனையின் பதிவையும், தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மருத்துவமனை நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றவும், மருத்துவமனையின் பதிவை நிறுத்தி வைத்ததை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.சுகாதாரத் துறை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், கூடுதல் பிளீடர் விஜய் ஆஜராகி 'விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையை, பொது நலன் கருதி சீல் வைக்கலாம்; கரு முட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'விதிகளுக்கு முரணாக செயல்படுவதால், பொது நலன் கருதி மருத்துவமனையின் பதிவை நிறுத்தி வைப்பதாக, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 'அதனால், காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூற முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!