ADVERTISEMENT
புதுடில்லி:'டாடா' குழுமத்தின் சூப்பர் செயலியான 'டாடா நியூ'விலிருந்து, அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சவுவிக் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார்.
டாடா நிறுவனம்,அதன் உப்பிலிருந்து மோட்டார் வாகனம்வரையிலான அனைத்து தயாரிப்புகளையும், ஒரே தளத்தில் விற்பனை செய்யும் வகையில், டாடா நியூ எனும் ஒரு சூப்பர் செயலியை, இந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்தது. இந்த சூப்பர் செயலியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர், சவுவிக் பானர்ஜி.
இந்நிலையில், திடீரென அவர் செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பானர்ஜி, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் குடியுரிமை பெற்ற பானர்ஜி, டாடா நியு அறிமுகத்துக்கு பிறகு, தன்னுடைய குடும்பத்தினருடன் செட்டில் ஆவதற்காகவே ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2016ம் ஆண்டில், 'டாடா கிளிக்' நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பானர்ஜி பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!