சுற்றுச்சூழல் அனுமதி பெற கெயில் நிறுவனத்திற்கு உத்தரவு
சென்னை:சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 'காஸ்' குழாய் வழித்தடம் அமைக்கக் கூடாது என, 'கெயில்' நிறுவனத்திற்கு, தென் மண்டலபசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதியில் உள்ள மேமாத்துார் கிராமத்தில், கெயில் நிறுவனத்தின் யூனிட் உள்ளது. சீர்காழியிலிருந்து மேமாத்துார் வரை 29 கி.மீ., துாரத்திற்கு காஸ் எடுத்துச் செல்வதற்காக, கெயில் நிறுவனம் குழாய் வழித்தடம் அமைத்துள்ளது.
கடந்த 2020 ஜூலை 20ம் தேதி, காஸ் குழாயில் கசிவு ஏற்பட்டு, 15 அடி உயரத்திற்கு புழுதி, மணலுடன் காஸ் வெளியேறியது.இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெறாமல், காஸ் குழாய் வழித்தடம் அமைக்கும் பணிகளை, கெயில் நிறுவனம் மேற்கொள்ள வேண்டாம்.சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் காஸ் குழாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட, கெயில் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அடிப்படையில், சுற்றுச்சூழல் இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுக்க வேண்டும்.
காஸ் வெளியேறியதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் வாரியம் ஆய்வு நடத்த வேண்டும்.கடலோர பாதுகாப்பு விதிகளை மீறி, காஸ் குழாய் வழித்தடம் அமைத்ததற்காக, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், கெயில் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!