Load Image
dinamalar telegram
Advertisement

காமன்வெல்த்: 10,000 மீ., நடை பந்தயம், 3,000 மீ ஸ்டீபிள் சேஸ்- ல் இந்தியாவுக்கு வெள்ளி

Tamil News
ADVERTISEMENT
பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.


இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது.

Latest Tamil Newsஅதில், 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பிரியங்கா கோஸ்வாமி வெற்றி பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 43 நிமிடங்கள் 38 வினாடிகளில் கடந்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார்.


Latest Tamil Newsஅதேபோல், 3, 000 மீ ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஸ் முகுந்த் சாபிள் வெள்ளி வென்றார். பந்தய தூரத்தை 8 நிமிடம் 11 வினாடிகளில் கடந்து பதக்கத்தை கைப்பற்றினார்.

வெள்ளி வென்ற அவினாஸ் முகுந்த் சாபிள், பிரியங்கா கோஸ்வாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுவரை காமன்வெல்த் போட்டியில் இந்தியா 9 தங்கம், 10 வெள்ளி ,9 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற வீராங்கனை, வீரர் இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • N S Sankaran - Chennai,இந்தியா

    இவர்கள் இருவரும் மற்றும் உயரம் தாண்டுதலில் சங்கர் நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் ஆகியோரின் சாதனை அளப்பரியது. இன்று சபலேயின் ஓட்டம் இந்தியாவுக்கும் மிகப்பெரிய பெயரை தேடித்தந்திருக்கிறது.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்