Load Image
dinamalar telegram
Advertisement

சினிமாக்காரர்கள் இடங்களில் ரெய்டு: சிக்கியது கணக்கில் வராத ரூ.200 கோடி

Tamil News
ADVERTISEMENT
சென்னை: சமீபத்தில் நடந்த ரெய்டில், திரைத்துறையினரின் கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி 'ரெய்டு' நடத்தினர். சென்னை, மதுரையில் 40 இடங்களில் சல்லடை போட்டு தேடினர்.


Latest Tamil News
இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் , டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (36)

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  இதுபோன்று இந்தியாவின் நாங்கு திக்குகளிலும் மத்தியிலும் சோதனை செய்து திரட்டிய பணமே அடுத்த நிதியாண்டிற்கு நிதி பற்றாக்குறையை முழுவதும் சமாளிக்கலாம்.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  ரஃபேல் போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் 560 கோடிகள் விலைபேசி ஒப்பந்தம் போடப்பட்டது.அந்த ஒப்பந்தத்தை மோடி அரசு ரத்து செய்தது..பிறகு அதே விமானங்களை 1600 கோடி விலை பேசி மோடி அரசு வாங்கி இருக்கிறது.

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  ஹரியானாவை சார்ந்த தொல் பொருள் ஆராட்சியாளர் ஷா என்பவர் ஹரப்பர் நாகரிகம் பற்றி ஆராட்சி செய்து முடிவில் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கிடைத்த பொருட்களில் கடவுள் மதம் சம்பந்தமாக எந்த பொருளும் கிடைக்கவில்லை ..மதம் சம்பந்தமாக கிடைத்த அணைத்து பொருட்களும் பிந்தைய காலத்திற்கு உட்பட்டவை .என்று முடிவு கூறினார்

 • P Karthikeyan - Chennai,இந்தியா

  வெயிட் அண்ட் வாட்ச் . இன்னும் நான்கு வருடம் விடியாத ஆட்சி ..கத்தி மேல் நடப்பது போல.. ஒரு பக்கம் போலி பாஸ்போர்ட் இன்னொரு பக்கம் NIA சோதனைகள் அடுத்த பக்கம் அமலாக்கத்துறை ரைடுகள் ..நான்காவது பக்கம் தலைவர் அண்ணாமலை எடுத்து விடும் ஊழல் பட்டியல் ..இப்படி நாலா பக்கமும் ரவுண்டு கட்டினால் எப்படி புரண்டு படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை .

 • ஆரூர் ரங் -

  ஏன் கள்ளப் பணம் இருக்காது? தியேட்டர் உரிமையாளர்கள் பிளாக் டிக்கெட், வருமானத்தை எடுத்துக்😛 கொள்ளுகிறார்கள். கான்டீன், பார்க்கிங் வசூலையும் முழுவதுமாக கணக்கில் காட்டுவதில்லை. அவர்களது ஒத்துழைப்புடன் வினியோகஸ்தர்களும் வசூலைக் குறைத்துக் காண்பித்து தயாரிப்பாளரையும் வருமானவரித் துறையையும் ஏமாற்றுகிறார்கள். சினிமா பைனான்ஸ் 70 சதவீதம் அரசியல்வாதிகளது கறுப்புப் பணத்தில் நடக்கிறது. நடிகர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முக்கால்வாசி வரை கருப்பிலேயே சம்பளம் பெற வற்புறுத்தப்படுகிறார்கள். தீர்வு? அரசே புக்கிங் ஆப் துவங்கி அதன் வழியே மட்டும் தான் டிக்கெட் விற்பனை என்று ஆக்க வேண்டும். அது நேர்மையான தயாரிப்பாளர்களை வாழவைக்கும். அரசுக்கும் ஜிஎஸ்டி சரியாக வசூலாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்