Load Image
Advertisement

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை: முதல்வர் கோரிக்கை

Tamil News
ADVERTISEMENT
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது: 1996 திமுக ஆட்சியில் தான் தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. தனிமனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும், ஒரு இனத்தின் தன்மானமாக இருந்தாலும் பாதிக்கப்பட கூடாது. மானுட கூட்டத்தின் உரிமைகளாக இருந்தாலும் அவை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பாதிக்க கூடாது. சுயமரியாதைதான் ஒவ்வொரு மனிதனுக்கு முக்கியம். மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான்

Latest Tamil News
அரசியலமைப்பு சட்டத்தின் மிக மிக அடிப்படை என்பது மனித உரிமைகள் தான்.சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்டவற்றை காக்கும் உரிமை அனைத்து அரசுக்கும் உண்டு.தமிழக அரசு சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூக நீதியின் அரசாக செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒரு நாளும் தவற மாட்டோம்


நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையத்தின் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மாநில மனித உரிமை ஆணைய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழ் வழியில் உருவாக்கப்படும். மனித உரிமை தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். மனித உரிமை ஆணைய விசாரணை குழுவில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


அதிகாரிகளுக்கு விருது
இந்த விழாவில், மனித உரிமை புகார்கள் சிறப்பாக கையாண்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு ஸ்டாலின் விருது வழங்கினார். திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கும், மதுரை போலீஸ் கமிஷனர் மற்றும் கோவை எஸ்.பி.,க்கும் விருது வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து (28)

  • Radhakrishnan - ,

    இதைத் தானே G.K. வாசன் நேற்று நாடாளுமன்ற மேலவையில் கேட்டார்? எதுல தான் ஸ்டிக்கர் ஓட்டறதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லையா? இது தான் திராவிட மாடல் போல.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    RSS LECTURING US ON PATRIOTISM & NATIONALISM

  • raja - Cotonou,பெனின்

    என்ன இது ஒரு கொத்தடிமையும் இங்கு வந்து ஊளை இடவில்லை ஏன் 200ரூவா இன்னும் வரலையா......

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    ராகுல்,உன் அம்மாவிற்கு வயது ஆகி விட்டது.திஹாரில் நிறைய நாள் உன்னுடன் உதவ கழக கண்மணிகள் வருவார்கள்.அஞ்சாதே.வாழ்நாள் முழுதும் பொழுது போகும். நன்றாக பேசுவார்கள் கழக கண்மணிகள்.

  • ThiaguK - Madurai,இந்தியா

    உங்கள் குடும்ப புகழை பாராளுமன்றத்தில் பாடுவதற்கு மட்டுமே உங்க எம் பீக்களுக்கு நேரம் பத்தலை ...என்னத்த சொல்ல ..மந்திரி பதில் அளிக்கும் நேரம் வரும்போது வெளி நடப்பு கூத்து ..மறுபடியும் உங்க குடும்ப பாட்டை பாடிவிட்டு வீட்டுக்கு வந்திடுவார்கள் ..இந்த கொடுமைகளுக்கு விமானம் தாங்கும் இடம் லட்ச கணக்கில் சம்பளம் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement