Load Image
dinamalar telegram
Advertisement

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்?: தேர்தல் முடிந்தது: இரவு வெளியாகிறது முடிவு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தே.ஜ., கூட்டணிக்கு அதிக எம்.பி.,க்கள் இருப்பதால், அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது; இன்று இரவே முடிவு வெளியாகிறது.


தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம், வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று புதுடில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கிறது. இதில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், நியமன எம்.பி.,க்கள், லோக்சபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிப்பர். துணை ஜனாதிபதி தேர்தலில், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர், 71, போட்டியிட்டார். இவர், ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஓட்டுப் பதிவு



இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, 80, போட்டியிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆல்வா, ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தவர். இன்று காலை 10:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு, மாலை 5:00 மணிக்கு முடிவடைந்தது உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.


ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளையும் சேர்ந்த 788 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இது, மறைமுக தேர்தலாகவே நடக்கும். ஓட்டளிக்கும் எம்.பி.,க்கள் தங்களின் ஓட்டுச் சீட்டுகளை காட்டுவது தடை செய்யப்பட்டுஉள்ளது. அரசியல் கட்சிகளின் கொறடாக்கள், குறிப்பிட்ட வேட்பாளருக்குத் தான் ஓட்டளிக்க வேண்டும் என, தங்கள் எம்.பி.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பின்னடைவு



இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கருக்கு, பா.ஜ., சிவசேனா அதிருப்தி குழு, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதில், பா.ஜ.,வுக்கு மட்டுமே லோக்சபாவில் 303, ராஜ்யசபாவில் 91 என, மொத்தம் 394 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று ஜக்தீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு, காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, தேசியவாத காங்., சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆனால், பார்லிமென்டில் அதிக எம்.பி.,க்களை வைத்துள்ள கட்சிகளில் முக்கியமானதாக கருதப்படும் திரிணமுல் காங்கிரஸ், துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்தது. இது, மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


தேர்தல் பார்லி வளாகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஓட்டளித்தனர். எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டார். எம்.பி.,க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டளித்தனர்.
Latest Tamil News
Latest Tamil News

ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றால், நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக வரும் 11ம் தேதி பதவியேற்பார்.


வாசகர் கருத்து (7)

  • ThiaguK - Madurai,இந்தியா

    அல்வா வா

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    துணை ஜனாதிபதியால் நாட்டுக்கு என்ன நன்மை? ஜனாதிபதியால் கூட ஒன்றும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத பொது எதற்கு இந்த பதவிகள். எல்லா பணத்தையும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்ய பயன்படுத்தலாமே. மக்கள் நேரடியாக தேர்ந்தடுக்கும் பிரதம மந்திரிக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்து, அவர் எடுக்கும் முடிவுகள் கோர்ட் மற்றும் பார்லிமென்டில் ஒப்புதல் வாங்கும் முறை நல்லது என்று நினைக்க தோன்றுகிறது. மாற்று கருத்து உள்ளவர்கள் உங்கள் பதிலை பதிவிடவும்.

    • ஆரூர் ரங் - ,

      துணை ஜனாதிபதிதான் ராஜ்யசபாவின் சபாநாயகர் பொறுப்பையும் வகிக்கிறார். முன்பு ஜனாதிபதி திரு. பக்ருதீன் அலி காலமானபோது மறுதேர்தல் நடக்கும் வரை 🤔துணை ஜனாதிபதி பி டி ஜாட்டி பொறுப்பு வகித்தார்.

    • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

      ராஜ்யசபாவின் சபாநாயகர் பொறுப்பை ஒருவருக்கு கொடுத்து விட வேண்டியதுதான். செலவு மிச்சம். இந்த ரெண்டு பதவியும் இல்லாத பொது, ஒருவர் இறந்தால் என்ற கேள்விக்கு இடமில்லை. வேணுமென்றால் துணை பிரதமர் பதவியை ஒரு மூத்த மந்திரிக்கு கொடுத்து, ஒரு வேலை பிரதமருக்கு சங்கடம் என்றால் இவர் பொறுப்பு ஏற்கலாம்.

  • raja - Cotonou,பெனின்

    இதுல என்ன சந்தேகம்.... மேதகு ஜெகதீப் தான்......

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    கல்கத்தா முன்னாள் ஆளுநர் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள், எல்லோருக்கும் நம் வாழ்த்துக்கள். நம்மவர்கள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என்றெல்லாம் கூறிக்கொண்டுவந்தாலும் என்றென்றும் நீங்காத இடத்தைப் பிடித்த திரு கலாம் ஐயா இடத்துக்கு யாருமே வராமல் போவது மிகவும் வருத்தம் அளிக்கிறது . அப்படி ஒரு எளிமையாக மனிதராக வாழ யாருமே தயாரக இல்லாமல் இருக்கிறார்களே, வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement