ADVERTISEMENT
மதுரை : 'ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்டதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தலைவர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளதாவது:ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய, முறையான டெண்டர் விடப்படவில்லை.
ஏற்கனவே ஆவின் சார்பில் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்படும் நிறுவனத்தை தவிர்த்து, 1 கிலோவிற்கு 30 ரூபாய் அதிகம் விலை கொடுத்து, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வகையில் ஆவினில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து வினியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சர்வதேச செஸ் போட்டியை வைத்து நடந்துள்ள முறைகேடும் கூடுதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.டெண்டர் விடாமல் 'ஆர்டர்' கொடுக்க ஆவின் அதிகாரிகளை துாண்டியது யார், எத்தனை ஆயிரம் கிலோ பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது,
ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை அவர்களிடம் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (31)
அண்ணாமலை வந்தாலும் வந்தார் ஒரு கோடி இரண்டு கோடி கூட அடிக்க முடியவில்லை. அதைக்கூட மோப்பம் பிடித்து - கேவலப்படுத்திவிடுகிறார்... எம் எல் ஏ சீட்க்கு முதலீடு செய்தவனுக்கெல்லாம் நஷ்டம்... தலைமையிடம்தான் இனி ரீபண்ட் கேட்க வேண்டும். முருகனிடம் சத்ரு சம்கார யாகம் வேறு செய்திருக்கிறார்கள். முருகன் யாரை அழிக்கிறான் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.. புரூட் லாங்குவேஜுக்கா அல்லது சூரிய குடும்பத்துக்கா அல்லது மலைக்கா என்பதை சிலர் சொல்ல மறுக்கிறார்கள்.
திருடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாமென்பது 😛திமுக ஆத்திச்சூடி.
இது என்னடா புது கூத்து?
அப்படித்தான் ஊழல் செய்வோம். என்ன பண்ணுவீங்க ? நாங்க சம்பாதிக்க வேண்டாமா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முறைகேடு, ஊழல் ன்னு புலம்புறீங்களே? பாம்பின் இயல்பு அது கொத்தவே செய்யும். ஒட்டு போட்டீங்கல்ல, 2026 வரைக்கும் வெயிட் பண்ணுங்க..