ADVERTISEMENT
கடலுார் : கடலுார் பில்லாலி தொட்டி முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கடலுார் மாவட்டம், திருவந்திபுரம், அடுத்த பில்லாலி தொட்டி, ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது.தினமும் அபிஷேகம், வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான செடல் உற்சவத்தையொட்டி நேற்று காலை ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. மதியம் அம்மனுக்கு செடல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் எடுத்து பக்தர்கள் பறவை காவடி எடுத்து, முதுகில் அலகு குத்தி, ஜே.சி.பி., உள்ளிட்ட இயந்திரங்களை கோவிலுக்கு ஊர்வலமாக இழுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வடை சுட்டு, அதனை வெறும் கைளால் எடுத்து சாமிக்கு படையலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!