Load Image
dinamalar telegram
Advertisement

அழகிரி முதுகில் போலீஸ் கைவைப்பு: காங்கிரசார் திடீர் மறியல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் முதுகில் கை வைத்து தள்ள முயன்ற போலீஸ் அதிகாரியை கண்டித்து காங்கிரசார் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.


அத்தியாவசிய பொருட்கள் விலை உயர் உயர்வை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் சென்னை சின்னமலை அருகில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அழகிரியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஓடி வந்து காங்கிரசாரை அப்புறப்படுத்த முயன்றார்.


தொண்டர்களின் முதுகில் கை வைத்து தள்ளியபடியே வேகமாக கூட்டத்திற்குள் முன்னேறினார். தொண்டர்களை தள்ளியதுபோல் அழகிரி முதுகிலும் போலீஸ் அதிகாரி கை வைத்ததும் அவருக்கு கோபம் வந்தது. அதை வெளிக்காட்டாமல் அப்படியே மவுனமாக நின்று அந்த போலீஸ் அதிகாரியை முறைத்துப் பார்த்தார் அழகிரி. முதுகில் கை வைத்த தகவல் தெரியவந்ததும் காங்கிரசார் திடீரென சாலை மறியலில் இறங்கினர். போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர்.


இதையடுத்து அந்த போலீஸ் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். பின் அழகிரி பேட்டி: மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி போடும் மத்திய அரசு தாய்ப்பாலுக்கும் வரி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.'5 ஜி' அலைக்கற்றை விவகாரத்தில் அதிக லாபம் கிடைத்துள்ளது என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதிக லாபம் கிடைக்கவில்லை என்றால் ஏலத்தை ரத்து செய்வது தான் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முற்றுகை ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட அழகிரி இளங்கோவன் தங்கபாலு கோபண்ணா நெடுஞ்செழியன் பொன்.கிருஷ்ணமூர்த்தி முத்தழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    போலீசு அதிகாரி ஒருவர் தொண்டர்களின் முதுகில் கை வைத்து தள்ளியபடியே வேகமாக கூட்டத்திற்குள் முன்னேறினார். தொண்டர்களை தள்ளியதுபோல் அழகிரி முதுகிலும் போலீஸ் அதிகாரி கை வைத்ததும் அவருக்கு கோபம் வந்தது. இதற்க்கு ஏன் அழும்கிரி கோபப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக யார் இருந்தாலும் போலீசு முதலில் சொல்லிப் பார்ப்பார்கள். பிறகு அவர்களுக்கே உரிய தொனியில்தான் சொல்வார்கள் இதில் அழுகின்ற கிரிக்கு ஒரு சட்டம் அடுத்தவர்களுக்கு ஓர் சட்டமா என்ன இது. அழாமல் கிரி பிரக்ஷணம் செய்யவும்.

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    விசியம் நடந்திருக்கிறது இவிங்க கூட்டணி கட்சி ஆட்சி செய்யுற தமிழ்நாட்டில் அழகிரி முதுகில் கை வெச்சதுக்கா இத்தினி கலாட்டா? இவிங்க கட்சியும் கூட்டணிக்கட்சியும் மக்கள் அடிமடியிலேயே கை வெச்சதுக்கு ஏதாச்சும் ரியாக்ஷன் காட்டறோமா? அப்புறம் ஏன் இந்த அலப்பறை?

  • Gopalakrishnan S -

    நேஷனல் ஹெரால்டு விசாரணை சூடு பிடித்து தானைத்தலைவியை நான்கு கேள்விகள் கேட்டதும் கான்கிராஸ்காரர்களுக்கு விலைவாசி உயர்வு ஞாபகம் வந்து விட்டது !

Advertisement