ADVERTISEMENT
கான்பூர் : ஹிந்து கடவுளர்களான சிவன் மற்றும் காளி ஆகியவற்றை அவதூறு செய்யும் வகையில் படம் வெளியிட்ட ஆங்கில வார இதழ் ஆசிரியர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதிய பிரபல பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய், வார இதழில் வகித்து வந்த கட்டுரையாளர் பணியில் இருந்து விலகினார்.கேரளாவின் 'மலையாள மனோரமா' நாளிதழ் நிறுவனத்தில் இருந்து 'தி வீக்' ஆங்கில வார இதழ் வெளியாகிறது.
பிரபல பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய்,67, தி வீக் இதழில் கட்டுரையாளராக பணி புரிந்தார். கடந்த மாதம் 24ல் வெளியான இதழில் தேப்ராய் எழுதிய ஒரு கட்டுரையில், ஹிந்து கடவுளர்களான சிவன் மற்றும் காளியை அவதூறு செய்யும் வகையில் படங்கள் வரையப்பட்டு இருந்தன. இதற்கு, பா.ஜ., உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த கேடுகெட்ட கிழவனுக்கு யோகியின் புல்டோஸர் ட்ரீட்மெண்ட் தான் சரி