மூலவர் சன்னதியை பூட்டியதால் பரபரப்பு
புதுச்சேரி : தேங்காய்த்திட்டு வடபத்ர காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த நேரத்தில், மூலவர் சன்னதியை அறங்காவலர் குழுவினர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேங்காய்த்திட்டில் அமைந்துள்ள வடபத்ர காளியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நேற்று மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து திருவிளக்கு பூஜை நடத்தினர். இதற்கு, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை கூறி, மூலவர் சன்னதியை, கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்தவர்கள் பூட்டினர்.

இதையடுத்து, திருவிளக்கு பூஜை நடத்திய பெண்களும், பொதுமக்களும், கோவில் நிர்வாகத்திடம் எதற்காக மூலவர் சன்னதியை பூட்டினீர்கள் என கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கோவிலின் மூலவர் சன்னதி மீண்டும் திறக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!