சேலம் : ''விவசாயிகளை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.தமிழக விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் வாழ்வுரிமை மாநாடு நேற்று நடந்தது.
இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நாள் வேளாண் கண்காட்சியை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.அவர் பேசியதாவது:காந்திய கொள்கையை ஊக்குவிக்க அன்னிய பொருட்களுக்கான மானியத்தை நிறுத்த வேண்டும். நம் நாட்டில் விளையும் எண்ணெய் பயிர் தானியம் பருப்பு வகை உள்ளிட்ட சுதேசி பயிர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் சதவீதத்தை அதிகப்படுத்துவது கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். இதை விவசாயியாக வரவேற்கிறேன்.

அத்திக்கடவு அவினாசி திட்டப்பணி 1650 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டும் இன்னும் முடிக்கப்படாததால் அங்கேயும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.மொத்தத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் அத்திக்கடவு - அவினாசி திட்டம் மேட்டூர் உபரிநீர் திட்டம் தலைவாசலில் ஆசியாவில் பெரிய கால்நடை பூங்கா கால்நடை மருத்துவமனை ஆராய்ச்சி நிலைய பணிகள் ஆகியவை தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
காவிரி அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை மீட்டெடுக்க கடந்த ஆட்சியில் அறிவித்த 'நடந்தாய் வழி காவிரி' திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவில்லை.இதற்கு முறையாக மத்திய அரசை நாடாததே காரணம். துாங்கிக் கொண்டிருக்கும் அரசு இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் விவசாயிகளை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயிகளை மட்டுமா ஒட்டுமொத்த தமிழர்களையும் தான்.....கேடுகெட்ட விடியல் தமிழகத்துக்கு....