முல்லைப் பெரியாறு அணை திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
மூணாறு--முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், கடந்த மாதம் 31 முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 9.86 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், மூணாறு உட்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.மூணாறில் குண்டளை அணை அருகில் பல இடங்களில் மண் சரிந்தும், மரங்கள் சாய்ந்தும் போக்குவரத்து தடைபட்டது.
இந்நிலையில், இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில், 'அணையில் இருந்து மேலும் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படலாம். ஆற்றில் குளிப்பது, மீன்பிடிப்பது, 'செல்பி' எடுப்பது கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உச்ச நீதி மன்றமே 142 அடி வரை நீரை தேக்கலாம் என்றபோது 136 அடியிலேயே தணண்ணீரை திறப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்