Load Image
dinamalar telegram
Advertisement

இலங்கை நபரிடம் என்.ஐ.ஏ., விசாரணை

Tamil News
ADVERTISEMENT
திருப்போரூர்--திருப்போரூர் பகுதியில் தங்கி யிருந்த இலங்கை நபரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூரில் முகமது பைசல், 43, என்பவர், வாடகை வீட்டில் வசிக்கிறார்.


தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ., அதிகாரியான எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர், இவரது வீட்டிற்கு நேற்று வந்தனர்.என்.ஐ.ஏ.,வால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒரு நபருடன், முகமது பைசல் மொபைல் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் என்.ஐ.ஏ., அதிகாரிகள், தையூரில் விசாரணை மேற்கொண்டனர்.வீட்டில் இருந்த லேப்டாப், மொபைல் போன், ஆதார் கார்டு, இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை கைப்பற்றினர்.


ஆதார் கார்டு போலியானதா என விசாரிக்கும் அதிகாரிகள், முகமது பைசலை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:முகமது பைசல், இலங்கை கொழும்பு நகரத்தைப் பூர்வீகமாய் உடையவர். நான்கு ஆண்டுகளுக்கு முன், டில்லியில் தங்கியிருந்தார். அங்கிருந்து, தமிழகம் வந்து, கழிப்பட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கினார்.கடந்த நான்கு மாதங்களாக, தையூரில் தங்கியுள்ளார். இவர் மீது, சில வழக்குகள் இருப்பதால் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

    இந்திய நாடு என்ன சத்திரமா ?? வர ஆல் போற ஆல் எல்லாம் குடியேற, இவனுக்கு எப்படி ஆதார் கார்டு வந்தது, இலங்கை குடிமகன், எல்லாம் தவறாக உள்ளது, இவன் மட்டும் அல்ல குடும்பமும் சேர்த்து இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர், முதலில் இவன் குடும்பத்தை நாட்டை விட்டு நாடுகடத்த வேண்டும், ஆதார் கார்டு கொடுத்த அதிகாரிய டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

  • suresh kumar - Salmiyah,குவைத்

    எனது ஆதார் விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது.

  • duruvasar - indraprastham,இந்தியா

    எதுக்கு சென்னை மண்ணடியில் போராட்டம் நடத்தினார்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா ?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இலங்கை நபருக்கு எப்படி இந்திய ஆதார்?

    • Shekar - Mumbai,இந்தியா

      போட்டோஷாப் மூலம் உருவாக்கலாம், ரேகை, மொபைல் வெரிபிகேஷன் செய்யும்போது பிடிபடுவார்கள்

Advertisement