Load Image
dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்பில் இருந்த முதன்மை செயலர் அபூர்வாவின் தாய் வீடு அகற்றம்

Tamil News
ADVERTISEMENT
திருத்தணி :நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த முதன்மை செயலர் அபூர்வாவின் தாய் வீடு திருத்தணி வருவாய் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. தவிர ஊராட்சி தலைவரின் வீடு உட்பட மொத்தம் 11 கட்டடங்கள் இடிக்கப்
பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில் வெள்ளை குட்டை 6 ஏக்கரில் அமைந்துள்ளது.வருவாய் துறையினரால் குட்டை நிலம் எனவகைப்படுத்தப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து எட்டு வீடுகள் ஒரு கடை கட்டப்பட்டிருந்தன.Latest Tamil News
நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா 45 என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார்.
நீர்நிலை என்பது உறுதி செய்யப்பட்டதால் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத்பேகம் தலைமையிலான வருவாய் துறையினர் மண் அள்ளும் இயந்திரத்துடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர்.திருத்தணி தாசில்தார்
வெண்ணிலா கூறியதாவது:நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுகின்றன. இதுவரை ஆக்கிரமிப்பாளருக்கு மாற்று நிலம் ஒதுக்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவிலும் அது தொடர்பாக குறிப்பிடப்
படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம்வருவாய் துறையின் புல எண்: 109 /7ல் குட்டையை ஆக்கிரமித்து தமிழக அரசின் முதன்மை செயலர் ஐ.ஏ.எஸ். அபூர்வாவின் தாய் அருணோதயா இரு வீடுகள் கட்டி உள்ளார்.இதில் 600 சதுரடி வீடு நேற்று இடிக்கப்பட்டது. 1100 சதுரடியுள்ள மற்றொரு வீடு இன்று இடிக்கப்படுகிறது.
அதேபோல் தொழுதாவூர் ஊராட்சி தலைவர் அருள்முருகன் கட்டியிருந்த 1 800 சதுரடி வீடு இடிக்கப்பட்டது. தவிர ஆறு வீடுகள் ஒரு கடை மட்டும் அரசு கட்டடங்களான ரேஷன் கடை ஊராட்சி அலுவலகம் ஆகியவை இடிக்கப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையிலான 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (8)

 • jayvee - chennai,இந்தியா

  சென்னை சைதாப்பேட்டையில் பல திமுக பிரமுகர்களால ஆக்ரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களையும் மீட்கும் தைரியம் முதலமைச்சருக்கு உள்ளதா .. உதாரணம் காரணி கர்டெர்னில் உள்ள ஒரு வீடு குன்றாது ஊராட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளது ..

 • raja - Cotonou,பெனின்

  வேலி ஏ பயிரை மேஞ்சி இருக்கு......இடிச்சிங்க சரி..... ஆக்கிரமிச்சதுக்கு என்ன தண்டனை......

 • duruvasar - indraprastham,இந்தியா

  இந்த ஆக்கிரமிப்புக்களுக்கு வித்திட்டு அரசாணை வெளியிடப்பட்டது முத்தமிழ் வித்தகர் முத்துவேல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் .

 • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

  சபாஷ்... அரசு ஊழியரான முதன்மை செயலர் அபூர்வாவின் தாயாரே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பதை கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இதுவல்லவோ திராவிட மாடல். ஏன் ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு இதுவரையில் யாரிடமும் பதில் இல்லை. அனுமதித்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. முதல்வர் ஸ்டாலினாவது தனக்கு ஓட்டுப்போட்டு மக்களுக்கு பதில் கூறுவாரா? இல்லையேல் ஆக்கிமிப்பை அனுமதித்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்வாரா?

 • Yogeshananda - Erode,இந்தியா

  👌👌👌👌👍👍👍👍

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்