Load Image
dinamalar telegram
Advertisement

பாரம்பரிய விதை, உணவு முறை கண்காட்சி திருவிழா

Tamil News
ADVERTISEMENT
சென்னை:தேசிய கைத்தறி நாளையொட்டி, மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய விதைகள், உணவு முறை குறித்த கண்காட்சி திருவிழா நடந்தது.சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், தேசிய கைத்தறி நாளையொட்டி, பாரம்பரிய விதை, உணவு முறை, பருத்தி ஆடைகள் குறித்த கண்காட்சி திருவிழா நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி, வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கவும், விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், 'இந்தியாமேட் கலெக்டிவ் டாட் காம்' இணையதளம் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு, அதை வழிநடத்தும் அனந்து மற்றும் சுபா பாரத்வாஜ் ஆகியோர் கூட்டு முயற்சியில், இந்த கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், இயற்கை சாயம் கொண்ட பருத்தி ஆடைகள், மேற்கு வங்கத்தின் பேரிச்சம் பழ இலையில் தயாரித்த குடுவை, தொப்பி, ஜாடி, தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் மஸ்லின் வகை புடவை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும், லம்பாடி வகையான செயின், வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள், யானைத் தந்தம் நீள வெண்டை, மெழுகு வெண்டை, சிறகு அவரை என பாரம்பரியமான விதைகள், 60 வகையான நெல் வகைகள், தேங்காய் ஓடுகளில் செய்யப்பட்ட பொருட்கள் என, பல வகை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுஉள்ளன. வாழை நார் தொட்டி செடியின் வகைகளும் பார்வையாளர்களை கவர்ந்தன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, அகில இந்திய கிராப்ட் ஸ்ப்பின்னிங் கவுன்சில் தலைவர் கீதா ராம், எக்ஸ்னோரா தலைவர் செந்துார் பாரி, நடிகை ரேவதி, கன்னட நடிகர் சச்சு, ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement