திருமலையில் பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம்
திருப்பதி-'திருமலையில் செப்., மாதம் நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது, வருகை தரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்' என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இது பற்றி தேவஸ்தானம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: திருமலை ஏழுமலையானுக்கு செப்., 27 முதல், அக்., 5 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வீதியுலா நடக்க உள்ளது.பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். திருமலை மற்றும் அலிபிரியில் பக்தர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகள் செய்யப்படும்.
கண்காணிப்பு கேமரா
வாகன சேவைகள் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.பக்தர்களுக்கு தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி, வி.ஐ.பி., 'பிரேக்' தரிசனங்கள், 300 ரூபாய் விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கான சலுகை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க, தினமும் ஒன்பது லட்சம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்படும்.திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் வெளிவட்ட சாலையில் நிறுத்தி, பக்தர்களை இலவச பஸ்கள் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும்.
போக்குவரத்து தடை
கருட சேவை நாள், அதற்கு மறுநாள் மதியம் 12:00 மணி வரை, திருமலை- - திருப்பதி இடையே மலைப்பாதையில் இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!