Load Image
dinamalar telegram
Advertisement

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? : பார்லி.,யில் இன்று நடக்கிறது தேர்தல்

புதுடில்லி-நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், பார்லிமென்ட் வளாகத்தில் இன்று நடக்கிறது.
Latest Tamil News

தே.ஜ., கூட்டணிக்கு அதிக எம்.பி.,க்கள் இருப்பதால், அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது; இன்று இரவே முடிவு வெளியாகிறது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம், வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.


இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று புதுடில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கிறது. இதில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், நியமன எம்.பி.,க்கள், லோக்சபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிப்பர். துணை ஜனாதிபதி தேர்தலில், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர், 71, போட்டியிடுகிறார். இவர், ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஓட்டுப் பதிவு

இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, 80, போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆல்வா, ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தவர். இன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப் பதிவு, மாலை 5:00 மணிக்கு முடியும். உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு, இரவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளையும் சேர்ந்த 788 உறுப்பினர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இது, மறைமுக தேர்தலாகவே நடக்கும். ஓட்டளிக்கும் எம்.பி.,க்கள் தங்களின் ஓட்டுச் சீட்டுகளை காட்டுவது தடை செய்யப்பட்டுஉள்ளது. அரசியல் கட்சிகளின் கொறடாக்கள், குறிப்பிட்ட வேட்பாளருக்குத் தான் ஓட்டளிக்க வேண்டும் என, தங்கள் எம்.பி.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பின்னடைவு

இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கருக்கு, பா.ஜ., சிவசேனா அதிருப்தி குழு, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதில், பா.ஜ.,வுக்கு மட்டுமே லோக்சபாவில் 303, ராஜ்யசபாவில் 91 என, மொத்தம் 394 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று ஜக்தீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Tamil News எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு, காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, தேசியவாத காங்., சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆனால், பார்லிமென்டில் அதிக எம்.பி.,க்களை வைத்துள்ள கட்சிகளில் முக்கியமானதாக கருதப்படும் திரிணமுல் காங்கிரஸ், துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது. இது, மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றால், நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக வரும் 11ம் தேதி பதவியேற்பார்.

டி.ஆர்.எஸ்., ஆதரவு

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு, தெலுங்கானா மாநில ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் எம்.பி., கேசவ ராவ் கூறுகையில், ''துணை ஜனாதிபதி தேர்தலில் மார்கரெட் ஆல்வாவுக்கு ஓட்டளிக்க, எங்கள் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • vadivelu - thenkaasi,இந்தியா

    எம் பி க்களுக்கு ஏழை வாக்காளர்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுவார்கள், எம் பி க்களும் ...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்