Load Image
dinamalar telegram
Advertisement

நாடு முழுதும்... காங்., ஆர்ப்பாட்டம்!

Tamil News
ADVERTISEMENT
விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும், கறுப்பு உடை அணிந்துகாங்., - எம்.பி.,க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அப்போது, ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயற்சித்த காங்., - எம்.பி., ராகுல் கைது செய்யப்பட்டார். கட்சி தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்காவையும் போலீசார் கைது செய்தனர்.மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் இறுதி நாளான நேற்றும், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளியும், கூச்சல் குழப்பமும் நிலவின.

வெளிநடப்புகேள்வி நேரம் துவங்கிய சில நிமிடங்களுக்குள் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு லோக்சபா கூடியதும், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளின் எம்.பி.,க்கள் பேசுவதற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தனர்.இதை ஏற்க, சபாநாயகராக இருந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்த கீர்த்தி பிரேம்ஜி பாய், மறுப்பு தெரிவிக்கவே, வேறு வழியின்றி தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபாவும் கூடிய சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.


முன்னதாக காலையில் காங்., தலைவர் சோனியா, ராகுல், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட லோக்சபா காங்., - எம்.பி.,க்களும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ராஜ்யசபா காங்., - எம்.பி.,க்களும் பார்லி.,க்கு கறுப்பு உடையில் வந்திருந்தனர்.விலைவாசி உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரி உயர்வு குறித்து, பார்லி.,யின் பிரதான வாயிலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், 64 எம்.பி.,க்களும் கோஷம் போட்டபடி ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது, டில்லி போலீசார் வழி மறித்ததை அடுத்து பிரச்னை உருவானது.பல எம்.பி.,க்கள் தடையை மீற முயலவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல், வேணுகோபால் உள்ளிட்ட சிலர் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தவே நிலைமை பரபரப்பானது. பின், அனைவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதே போல ராஜஸ்தான், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி., வரி உயர்வு ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, நாடு முழுக்க ஆயிரக்கணக்கான காங்., தொண்டர்கள் கைதாகினர்.

போலீசார் குவிப்புபுதுடில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அக்பர் சாலையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.காங்., அலுவலக வாசலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, தடுப்புகளை தாண்டிக் குதித்து, விலைவாசி உயர்வை எதிர்த்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அவருடன் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், பிரியங்கா உள்ளிட்டோர் செல்லவில்லை.
இதையடுத்து, பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.*என் குடும்பம் பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. எனவே, கொள்கைரீதியாக எதிர்ப்பது எங்கள் கடமை. இந்த சண்டை சிந்தாந்த ரீதியிலானது.ராகுல், காங்., - எம்.பி.,


* ராகுல் ஒன்றும் காந்தியின் வாரிசு அல்ல. இவர் ஒரு போலி காந்தி. அவர் மட்டுமல்ல, அவரது சிந்தாந்தமும் போலியானது.பிரஹலாத் ஜோஷிபார்லி., விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,சலுகை காட்ட முடியாது

வெங்கையா நாயுடு கறார்ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும்போதே, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியதை கண்டித்து கோஷமிட்டனர். இதற்கு பதில் அளித்து ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:அரசியலமைப்பு சட்ட விதி எண் 105ன் படி, பார்லிமென்ட் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையை எந்தவித இடையூறும் இன்றி நிறைவேற்றுவதற்காக சில சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு 40 நாட்களுக்கு முன்னதாகவோ, பின்பாகவோ, எந்த ஒரு சிவில் வழக்குகளிலும் எம்.பி.,க்களை கைது செய்ய முடியாது. அதே நேரத்தில் கிரிமினல் வழக்குகளுக்கு இந்த சலுகை பொருந்தாது. பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும்போது எம்.பி.,க்களை கைது செய்யவோ, அவர்களுக்கு சம்மன் அளிக்கவோ கூடாது என கூற முடியாது. இது தொடர்பான எந்த சலுகையும் எம்.பி.,க்களுக்கு இல்லை. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடப்பதை காரணமாக கூறி, விசாரணை அமைப்புகள் முன் ஆஜராக முடியாது என, எம்.பி.,க்கள் கூற முடியாது; இதை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பிரியங்கா கைது

புதுடில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அக்பர் சாலையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.காங்., அலுவலக வாசலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, தடுப்புகளை தாண்டிக் குதித்து, விலைவாசி உயர்வை எதிர்த்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், பிரியங்கா உள்ளிட்டோர் செல்லவில்லை.இதையடுத்து, பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.


. - நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (17 + 42)

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  இவர் போராடவேண்டியது இப்போ பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில், இவர்கள் போராட்டம் என்பது இப்போ மக்களிடம் ஒரு தாக்கத்தையும் பண்ண முடியாது, பிராந்திய கட்சிகள் கூட பிஜேபி கட்சியை எதிர்க்கும் போல தெரிகிறது ஆனால் காங்கிரஸ் எட்டு ஆண்டுகாலம் தூங்கிவிட்டு இப்ப நேஷனல் ஹெரால்ட் கேஸ் விசாரணை என்றதும் விலைவாசி உயர்வு ஜன நாயகம் இந்தியாவில் செத்து போச்சு என்று பெயருக்கு போராடினால் எப்படி, போராட்டம் என்றால் ஒரு உயிர் இருக்க வேண்டும் மக்கள் அதை மனதளவில் ஏற்க வேண்டும், எந்த ஒரு குடிமகனும் அரசியல் கட்சி போராட்டத்தில் பங்கு கொள்ள மாட்டான், தொண்டர்கள் மற்றும் காசு குடுத்து கூட்டிட்டு வந்த கூட்டம் தான் இருக்கும், ஆனால் மக்கள் போராட்டத்தை கவனிப்பார்கள், காங்கிரஸ் அழிய காரணம் மாநில பிராந்திய கட்சிகள் மற்றும் பிரிந்து சென்று கட்சி நடத்தும் நபர்கள்தான் அதை முதலில் உணர வேண்டும் காங்கிரஸ், முதலில் தமிழ்நாடு,எம் ஜி ர் காங்கிரசை தன் சினிமா நடிப்பின் மூலம் வீழ்ச்சி கான செய்தார்,கேரளாவில் கம்யூனிட்கள் ஆட்சி நடக்கிறது அங்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவில்லை ,புதுசேரி அங்கும் ஆட்சியை திரு.ரங்கசாமி மற்றும் பிஜேபி கட்சியிடம் இழந்து உள்ளது,கர்நாடகம் தங்கள் சட்டரமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆட்சி இழப்பு,ஆந்திர மற்றும் தெலுங்கானா இனிமேலே காங்கிரஸ் ஆட்சி வராது இந்த மாநிலங்களில் ஆட்சி செய்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மகாராஷ்டிரா கொள்கை இல்ல கூட்டணி,குஜராத் மாநிலத்தில் இருப்பது அஞ்சு வருசமா தலைநிமிர முடியவில்லை அதற்க்கு காரணம் போலி மத சார்பின்மை ,ராஜஸ்தான் பிஜேபி கட்சியின் வசுந்த்ரா அவர்களின் தவறுகளில் இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது,பஞ்சாப் மற்றும் டெல்கி குட்டி கட்சி ஆம் ஆத்மீ கட்சியிடம் ஆட்சி பறிகொடுத்தல், ஹரியானா எளிதாக வெல்வது சரியான கூட்டணி அமைக்காமல் விட்டது,பிஹார் இனிமேலே லாலு சொல்லும் இடத்தில நிற்கணும், ஒடிசா வரவே முடியாது காரணம் தளம் இல்லை,மேற்கு வங்க மாநிலத்தில் கட்சி தேய்ந்து விட்டது,நாட்டின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப்பிரதேஷ் சரியான தலைவர்கள் இல்லை, காங்கிரஸ் கட்சி காணவில்லை, காங்கிரஸ் கட்சியை அங்கு உள்ள பிராந்திய கட்சிகள் யாரும் கூட்டணி சேர்க்க மாட்டார்கள், இது தான் இன்றைய நிலை, இவர்களின் வீழ்ச்சி ஊழல், இளைய தலைமுறை தலைவர்கள் இல்லை வரவும் விட மாட்டார்கள் எடுத்துக்காட்டு இரண்டு நாட்களுக்கு முன் திருச்சிராப்பள்ளியில் நடந்த கட்சி சண்டை விலைவாசி உயர்வு அதற்க்கு எதிராக போராட்டம், அதில் உன்காட்சி சண்டை ,என்ன சண்டை, யார் முன் வரிசையில் நின்று போட்டோவுக்கு ஸ்டில் கொடுப்பது என்பது தான், ஒரு அறுபது வயது மதிக்க தக்க நபர் நான்தான் நிற்பேன் என்கிறார் ஆனால் ஒரு நாற்பது வயதில் இருக்கும் நபர் நானும் நிற்பேன் என்கிறார், அறுவது வயதாகிவிட்டது பல போராட்டங்களை செய்திருப்பார் ஏன் விட்டு கொடுத்தால் என்ன ?? , முக்கியமாக போலி மதசார்பின்மை எடுத்துக்காட்டு சிவசேனா கட்சியுடன் கூட்டணி மற்றும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி, இது எப்படி பொருந்தும், ஊழல் கட்சிகளுடன் கூட்டணி அந்த கட்சிகள் எது என்று அனைவரும் அறிந்த விஷயம் தான், வாரிசு அரசியல், எந்த மக்கள் பணியையும் கிடப்பில் போடுவது, நாட்டிற்கு எதிரான கருத்துக்களை சொல்லுவது,மெகா ஊழல் வழக்குகள், வோட் வங்கி அரசியல் செய்வது, சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பித்தம், ராணுவ ஊழல், டூ ஜி அலைக்கற்றை வழக்கு, டெலிகாம் ஊழல் வழக்கு,கட்ச தீவை தாரை வார்த்தது,இலங்கை போரை நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது,சிறுபான்மை ஆதரவு கட்சி என்ற பெயர்,ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கட்சி, தேர்தல் வரும் போது மட்டும் பூணூல் போடுவாங்க, இப்படி காங்கிரஸ் கட்சி பெயர் வாங்கியுள்ளது, இதுக்கு மேல சொல்லணும் என்றால் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் மட்டுமே உள்ளனர் தொண்டர்கள் இல்லை என்றுதான் சொல்லணும், தலைவர்கள் டிஜிட்டல் செயல்முறை தான் மக்களிடம் யாரும் வருவதில்லை அது தான் பிரதான சிக்கல்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  இவனுங்க குடும்பம் தேசத்துக்காக பாடுபட்டதாம் , ஆயிரக்கணக்க்கான குடும்பங்கள் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் சொத்துக்களை இழந்தார்கள் இத்தாலியன் குடும்பம் இன்றுவரை சுகம் அனுபவிக்கிறது

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  விலை வாசி உயர்வுக்கு எதிராக போராட்டமா அல்லது அமலாக்க துறை விசாரணைக்கு எதிராக போராட்டமா ? 1947இல் ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்தது. 30 வருடத்தில் ஒரு டாலருக்கு 40 ரூபாய் என்று ஏன் விலை உயர்ந்தது ? 3 வருடங்கள் தவிர மீதி வருடங்களில் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. என்ன காரணம் ? ரூபாய் மதிப்பு எத்தனை முறை காங்கிரஸ் நாட்டை ஆளும்போது குறைக்கப் பட்டது ( devaluation). ஏன் செயற்கையாக எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்து இருந்தது காங்கிரஸ். ஏன் பெட்ரோல் பாண்ட் என்று லட்சக்கணக்கில் வெளி இட்டது. அதன் முதிர்ச்சி காலம் எவ்வளவு ? முதிர்ச்சி அடையும்போது எப்படி பாண்டுகளுக்கு பணம் திருப்பித் தர காங்கிரஸ் என்ன திட்டம் வைத்து இருந்தது. இப்போதைய அரசு காங்கிரசின் நிர்வாக சீர்கேட்டால் வைத்து இருந்த பெட்ரோல் பாண்ட் கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி தர வேண்டாமா? இல்லையென்றால் அரசு திவால் என்று பொருள். அரசும் சரி, மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் தான் நாடு முன்னேறும். முதலில் இந்த MP க்கள், MLA க்கள் தங்களுடைய legislative கடமையை சரியாக செய்து, அவர்களின் சலுகைகளை விட்டுக் கொடுக்கட்டும் பார்க்கலாம்.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  இந்த விலைவாசி உயர்வுக்காக போராட்டம் என்பதெல்லாம் சும்மா. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுல் இவர்களிடம் விசாரணை நடத்தியதுதான் இதன் முக்கிய காரணம்

 • Madhu - Trichy,இந்தியா

  இந்த 'கேசை' உன்னிப்பாகத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்குத்தான் ஒன்று புரியும். திரு. மல்லிகார்ஜுன கார்கே 'யங் இந்தியா' கம்பெனியின் முதன்மை அதிகாரி .. ஆங்கிலத்தில் சொல்வதானால் சி.இ.ஓ. புலனாய்வில் தெரிவது என்னவெனில் 'யங் இந்தியா' கம்பெனியில் மல்லிகார்ஜுன கார்கேயைத் தவிர்த்து வேறு எந்த ஊழியரும் கிடையாது. அவரே ஊழியர் & அவரே சி.இ.ஓ. வாம் ஏன் 'நோட்டீஸோ' , சம்மனோ அனுப்ப மாட்டார்கள்? எல்லாம் பித்தலாட்டம்...

Advertisement