ADVERTISEMENT
மாமல்லபுரம் :நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சதுரங்கப்பட்டினம் கோட்டை, இரவில் தேசிய கொடியின் மூவர்ண விளக்குகளில் ஜொலிக்கிறது.கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் பகுதியில், டச்சுக்காரர்கள் எனப்படும் நெதர்லாந்து நாட்டினர் கட்டிய, வர்த்தக கோட்டை வளாகம், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.நாட்டின் 75 ஆண்டுகள் சுதந்திர நிறைவை முன்னிட்டு, கோட்டை வளாகத்தில், தேசியக்கொடியின் மூவர்ண நிற பிரகாச ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டு, ஆக., 15 வரை இரவில் பிரகாசிக்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!