Load Image
dinamalar telegram
Advertisement
Ramjan

யோகாவுடன் செஸ்: மாணவியர் கலக்கல்

Tamil News
ADVERTISEMENT
கும்மிடிப்பூண்டி : செஸ் ஒலிம்பியாட் போட்டியை பெருமைப்படுத்தும் விதமாக, யோகாசனத்தில் நேற்று சிறுமியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாமல்லபுரத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்து இப்போட்டி, தமிழகத்தில் நடப்பதால், இதை பெருமைப்படுத்தும் விதமாக அரசும், தனியார் பலரும், அவரவர் தொழில் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பெருமைப்படுத்தும் விதமாக, யோகாசனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.அங்கு பயிலும் மாணவியர் இருவர், கண்டபெருடாசனத்தில் செஸ் விளையாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement