Load Image
dinamalar telegram
Advertisement

திருப்பூரில் மூதாட்டி கொலையா? தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூரில், மூதாட்டி துாக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறியும், மிளகாய் பொடி துாவப்பட்டு இருந்த காரணத்தால், கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், வேலம்பாளையம், சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. தம்பதிக்கு, இரண்டு மகன்கள். திருமணமாகி அருகே வசித்து வருகின்றனர். கோபாலன், குமார்நகர், 60 அடி ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இரண்டு மாடியில், 10 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தரைத்தளத்தில் தம்பதி மட்டும் வசித்து வருகின்றனர்.
மதியம், கோபாலன் வீட்டுக்கு வந்து விட்டு பனியன் நிறுவனத்துக்கு சென்றார். பின், மாலை வீட்டுக்கு திரும்பிய போது, கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, முத்துலட்சுமி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அந்த அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. அந்த அறை, வீட்டுக்கு வெளியே மிளகாய் பொடி துாவப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவலின் பேரில், வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் அபினவ்குமார் ஆகியோர் சென்று விசாரித்தனர்.
மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்து துாக்கில் தொங்க விட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனரா என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளைக்காக நடந்த கொலையை அல்லது வேறு ஏதாவது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பல்வேறு சந்தேகம்



இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இறப்பில் பல்வேறு சந்தேகம் உள்ளது. அக்கம்பக்கத்தில் ஆட்கள் உள்ள நிலையில், வெளி நபர்கள் யாராவது வந்து சென்றார்கள் என்று விசாரிக்கிறோம். அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்க விடப்பட்டாரா என்பது, பிரேத பரிசோதனையில் தெரிய வரும். பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.பத்து லட்சம், 10 சவரன் இல்லை என்று குடும்ப தரப்பில் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • duruvasar - indraprastham,இந்தியா

    இந்த மிளகாய் பொடி போடுவது கீரி பிள்ளை டெக்னிக் இல்ல.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அதென்ன..... 60 வயது பெண் என்றால் மூதாட்டியா?

Advertisement