ADVERTISEMENT
புதுடில்லி:இந்த ஆண்டு இறுதியிலிருந்து போன் சேவை கட்டணங்கள் உயர்த்தப்படும் என 'வோடபோன் ஐடியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரவீந்தர் தக்கர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:ஒட்டுமொத்த போன் சேவைகளுக்கான கட்டணம், இந்த ஆண்டு இறுதியில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.'5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்காக குறிப்பிடத்தகுந்த தொகை செலவழிக்கப்பட்டிருப்பதால், 5ஜி கட்டணம், 4ஜி சேவையை விட அதிகமாக இருக்கும்.
விலை கூடுதலாக இருந்தாலும், கூடுதலாக டேட்டா கிடைக்கும். காரணம், 4ஜி சேவையை விட, 5ஜி வேகமாக இருப்பதால், டேட்டா நுகர்வும் அதிகமாக இருக்கும்.இருப்பினும், நுகர்வோர் பயன்பாட்டை பொறுத்து, டேட்டா எவ்வளவு வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படும். முதல் சில விலையேற்றங்களை வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்கின்றனர் என்பதை பொறுத்து, தொடர் ஏற்றங்கள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வோடபோன் ஐடியா நிறுவனம், 18 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!