சர்வாதிகாரம் குறித்து பேசும் ராகுல் இந்திரா கால எமர்ஜென்ஸியை மறந்து விட்டாரா ? ரவிசங்கர் பிரசாத் பதிலடி
புதுடில்லி: காங்., முன்னாள் தலைவரும் எம்பி.,யுமான ராகுல் அளித்த பேட்டிக்கு பா.ஜ., தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. காங்., பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டி விவரம் வருமாறு:

நாட்டில் பொருளாதரம் பாதிப்பு, பணவீக்கம், ஜிஎஸ்டி , வேலை வாய்ப்பு விவகாரத்தில் ராகுல்
பொய் சொல்கிறார். நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது என்கிறார். அவரது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா.? அவரது குடும்ப நலனே அவருக்கு முக்கியம். குடும்பத்தினரை காப்பாற்ற ராகுல் துடிக்கிறார். ஊழலால் காங்கிரஸ் வளர்ந்துள்ளது.

ராகுல் ஜாமினை நாடுவது ஏன் ? காங்கிரஸ் கூறுவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். சர்வாதிகாரம் குறித்து பேசுகிறார், இந்திரா எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது ஏன் ? இதனை அவர் மறந்து விட்டாரா ? பார்லி.,யில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறார். அவர் தான் பார்லி.,யில் விவாதம் நடத்த வராமல் அஞ்சுகிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
வாசகர் கருத்து (23)
அவர்களுக்கு இப்போது தெரிந்தது எல்லாம் நேஷனல் ஹெரால்ட் , யங் இந்தியா மட்டுமே அவர்கள் காந்தியை மறந்து மூன்று தலைமுறை ஆகி விட்டது
Repeatedly, BJP is telling old stories will not help them and such attitude is noway develop our country
மீண்டும் எமெர்ஜென்சி கொண்டுவந்து , இந்த ஹெராயின் பாக்கெட்டை பிடித்து ஒரு காட்டு காட்டினால்தான் , சர்வாதிகாரம் என்றால் என்ன என்று புரியும் .....பட்டாயா ,போதை- இந்த இரண்டை தவிர இந்த பப்பு பயலுக்கு வேறொன்றும் தெரியாது ...திராவிடிட வேஸ்ட் போல , இது காங்கிரஸ் வேஸ்ட் ...
அப்போ அவருக்கு அஞ்சு வயசுதான். அதனால் அப்போ நடந்த எதுவும் ஞாபகம் இருக்க வேண்டியது நியாமமில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அப்போ அவரு சின்னப் பையன்.அவனுக்கு என்ன தெரியும்.