Load Image
dinamalar telegram
Advertisement

ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக்கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

கையில் கருப்பு பட்டை அணிந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: பார்லியில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை உள்ளது; ஜனநாயகம் செத்துக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒவ்வொரு கல்லாக கட்டமைக்கப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே அடித்து நொறுக்கப்படுகிறது. சர்வாதிகாரமான இந்த ஆட்சிக்கு எதிராக நிற்பவர்களை கொடூரமாக தாக்குகின்றனர், கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

இந்தியாவில் இருக்க கூடிய 2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த சர்வாிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா?. அத்தனை சுதந்திரமான அமைப்புகளும் மத்திய அரசு, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. மக்களின் பிரச்னைகளான இதுகுறித்து பேசக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது. நாட்டில் நடக்கும் பிரச்னைகள், மக்கள் துயர் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு தெரியவில்லை.
Latest Tamil Newsநீங்கள் விரும்பும் அனைத்தையும் கேள்வி கேளுங்கள். ஆர்.எஸ்.எஸ்.,ஸின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதைச் செய்யப் போகிறேன். நான் எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன், நான் கடுமையாகத் தாக்கப்படுவேன். உண்மையை சொன்னால் தாக்கப்படுவேன் எனில், உண்மையை சொல்வதை நிறுத்தமாட்டேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னை தாக்குங்கள். போரில் காயம் ஏற்படும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (59)

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  உங்கள் தாயார் திரு P V நரசிம்ம ராவ் அவர்களுக்கு கொடுத்த " மரியாதையை" நினைவு படுத்திக் கொள்ளவும். திரு சீதாராம் கேசரி அவர்களை ஒரு toilet இல் வைத்து பூட்டி தலைமை பொறுப்பை ஏற்றது நினைவிற்கு வருகிறதா? சாணக்ய நீதிப் படி ஒரு வெளிநாட்டு பெண்ணுக்கு ( ராணி) பிறக்கும் குழந்தை அரசாள முடியாது என்று ஹெலினா ( செலுகாஸ் என்ற அலெக்ஸாண்டரின் தளபதியின் பெண்) சந்திரகுப்த மௌரியர் என்ற அரசர் மணந்தபோது சொல்லப்பட்ட நீதி. ஏனெனில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு தேச பக்தி குறைவு என்ற வாதம் வைக்கப்பட்டது. ஆகவே அரசராகும்/ அரசராக்கும் உரிமை கிடையாது என்று அறியப்பட்டது. வாசகர்கள் ராகுல் பற்றி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பு இல்லை.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  என்னிடம் மோசடி செஞ்சயான்னு விசாரிக்கலாமா?.... எங்க பாட்டி யாரு தெரியுமா?... எங்க கொள்ளுத்தாத்தா யாரு தெரியுமா?... இதுவா ஜனநாயகம்?...

 • jss -

  ராவுலு எதுக்காப்பா வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்கிறாய். நல்ல பையனா, சமத்தா கடை விரலை சூப்பிக்கோண்டு அம்மாகிட்ட ஒக்காந்துக்கோ. விலை உயர்வு, என்பது உங்கள் கட்சியின் அவலத்தால் வந்த்து. 2013-14 ல் inflation 10 மேலே. இப்போது எவ்ளோ என்று சிதம்பரம் மாமாவை கேட்டு தெரிஞ்சுக்கோ. சரியா?

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  காங்கிரஸ் தான் செத்து கொண்டு இருக்கின்றது.

 • ... - ,

  கட்சில ஜனநாயகம் இல்ல.... அத இப்படி ஓபன் ஆக வா பேசுறது...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்